பிளேகாடிசு
பிளேகாடிசு | |
---|---|
கண்ணாடி அரிவாள் மூக்கன் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | தெரிசுகியோரினித்திடே
|
பேரினம்: | பிளேகாடிசு காவ்ப், 1829
|
மாதிரி இனம் | |
தாண்டாலசு பால்சினெலுசு லின்னேயஸ், 1766 | |
சிற்றினம் | |
பிளேகாடிசு சிஹி | |
வேறு பெயர்கள் | |
பிளேகாதோர்னிசு பிர்கெம், 1855 |
பிளேகாடிசு (Plegadis) என்பது தெரெசுகியோர்னிதிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இதனுடையப் பேரினப் பெயர் பண்டைய கிரேக்கச் சொல்லானது பிகாடோசு, "அரிவாள்" என்பதிலிருந்து உருவானது. இது இதனுடைய தனித்துவமான அலகின் வடிவத்தைக் குறிக்கிறது.[1] அண்டார்டிகா மற்றும் பல தீவுகளைத் தவிர அனைத்து கண்டங்களிலும் இதன் சிற்றினங்கள் காணப்படுகின்றன. கண்ணாடி அரிவாள் மூக்கன் மூன்று சிற்றினங்களில் மிகவும் பரவலாகக் காணப்படும் இனமாக உள்ளது. பிளேகாடிசு பேரினம் பின்வரும் மூன்று சிற்றினங்களைக் கொண்டுள்ளது:
படம் | விலங்கியல் பெயர் | பொது பெயர் | விநியோகம் |
---|---|---|---|
பிளேகாடிசு பால்சினெல்லசு | கண்ணாடி அரிவாள் மூக்கன் | ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் அட்லாண்டிக் மற்றும் கரீபியன் பகுதிகள் | |
பிளேகாடிசு சிஹி | வெள்ளை முக அரிவாள் மூக்கன் | மேற்கு ஐக்கிய மாகாணங்கள் தெற்கே மெக்சிகோ வழியாகவும், தென்கிழக்கு பிரேசில் மற்றும் தென்கிழக்கு பொலிவியாவிலிருந்து தெற்கே மத்திய அர்ஜென்டினா வரையிலும், மத்திய சிலியின் கடற்கரையிலும். | |
பிளேகாடிசு ரிக்வாய் | புனா அரிவாள் மூக்கன் | அர்ஜென்டினா, பொலிவியா, சிலி மற்றும் பெரு |
மேலும் இரண்டு புதைபடிவ சிற்றினங்களும் பேரினத்தில் வைக்கப்பட்டுள்ளன:
- பிரான்சில் ஆரம்பகால மியோசீன் படிவுகளில் காணப்பட்ட பிளேகாடிசு இப்போது ஜெராண்டிபிசு பாகனாவில் வைக்கப்பட்டுள்ளது. [2]
- பிளேகாடிசு பாரங்கிட்சு
மேற்கோள்கள்
தொகு- ↑ Jobling, James A (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. p. 310. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.
- ↑ Vanesa L. De Pietri (2013). "Interrelationships of the Threskiornithidae and the phylogenetic position of the Miocene ibis ‘Plegadis’ paganus from the Saint-Gérand-le-Puy area in central France". Ibis 155 (3): 544–560. doi:10.1111/ibi.12062.