பிளோரின் (இங்கிலாந்து நாணயம்)
புளோரின் நாணயம் (Florin (English coin)), சில நேரங்களில் லியோபர்ட் அல்லது டபுள் லியோபர்ட் என அழைக்கப்படுவது, 1344 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின்மூன்றாம் எட்வர்ட்டால் ஐரோப்பாவிலும் இங்கிலாந்திலும் பயன்படுத்த அறிமுகப்படுத்தப்படுத்தபட்ட தங்க நாணயம் ஆகும். இது 108 பரல் எடை (6.99829 கிராம்) பெயரளவு தூய தங்கத்தால் ஆக்கப்பட்டது. இது அப்போது ஆறு ஷில்லிங் மதிப்பைக் கொண்டிருந்தது (72 நவீன பென்ஸுக்கு சமம்). [1] [2] [3]
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புளோரின் நாணயமானது அதன் மதிப்புக்கு எடை குறைவாக இருந்தது, இதன் விளைவாக இது வணிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. 1344 ஆகத்தில் புழக்கத்தில் விடப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு இது திரும்பப் பெறப்பட்டது. மேலும் அதற்கு பதிலாக மிகவும் பிரபலமான கோல்ட் நோபல் நாணயம் (9 கிராம் தங்கம், 6s 8d மதிப்புடையது) வழங்கப்பட்டது.
விளக்கம்
தொகுநாணயத்தின் முகப்புப் பக்கத்தில் மன்னர் அரியணையில் அமர்ந்திருப்பதாக காட்டப்பட்டுள்ளது, பக்கங்களில் இரண்டு சிறுத்தைகளின் தலைகள் உள்ளன; பழ மரபு வாக்கியமாக EDWR D GRA REX ANGL ⁊ FRANC DNS HIB (கடவுளின் அருளால், "எட்வர்ட், இங்கிலாந்து மற்றும் பிரான்சு, அயர்லாந்து பிரபு"). உள்ளது. பின்பக்கத்தில் ஒரு அரச சிலுவை காட்டப்பட்டுள்ளது, இடைவெளியில் ஒரு சிறுத்தை; தொன்மச் சொல்லாக புராணக்கதை IHC TRANSIENS PER MEDIUM ILLORUM IBAT ("ஆனால் லூக்கா 4:30 முதல் இயேசு அவர்கள் வழியே சென்றார்").
எஞ்சிய நாணயங்கள்
தொகுஇந்த நாணயங்களில் நான்கு மட்டுமே கிடைத்துள்ளன. 1857 ஆம் ஆண்டில் டைன் ஆற்றில் இரண்டு நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தன்போது அவை பிரித்தானிய அருங்காட்சியகத்தில்ல் வைக்கபட்டுள்ளன. ஒன்று 2006 இல் கண்டுபிடிக்கப்பட்டு, ஏலத்தில் 60 460,000 ஈரோவுக்கு விற்கப்பட்டது, இது பிரித்தானிய நாணயத்தின் விலையில் ஒரு சாதனை ஆகும். [4] நான்காவது 2021 அறிவிப்பின்படி. இங்கிலாந்தின் நார்பேக் கவுண்டியில் 2019 அக்டோபரில் கண்டுபிடிக்கப்பட்டது. [5]
2013 இன் ஒரு பட்டியலின்படி இந்த நாணயம் உலகின் மிக விலையுயர்ந்த ஒன்றாகும். [6]
குறிப்புகள்
தொகு
- ↑ Great Britain Royal Mint (1906). Catalogue of the Coins, Tokens, Medals, Dies, and Seals in the Museum of the Royal Mint (volume 1 ed.). H.M. Stationery Office. p. 40. பார்க்கப்பட்ட நாள் 23 March 2016.
- ↑ Emma Howard (August 2018). Coins of England & the United Kingdom 2018: Predecimal Issues. Spink.
- ↑ Spink, Coins of England and the United Kingdom. 46th edition standard catalogue of British coins, 2011.
- ↑ "News – The Scotsman". Scotsman.com. பார்க்கப்பட்ட நாள் 21 March 2019.
- ↑ "Gold coins lost in Black Death confusion found in Reepham". https://www.bbc.co.uk/news/uk-england-norfolk-57520248.
- ↑ "The 10 Most Expensive Coins and Banknotes in the World". mentalfloss.com (in ஆங்கிலம்). 2013-11-12. பார்க்கப்பட்ட நாள் 2019-05-01.
வெளி இணைப்புகள்
தொகு- Www.ukcoinpics.co.uk இல் இரட்டை சிறுத்தை மற்றும் உன்னதமான படம் பரணிடப்பட்டது 2010-12-26 at the வந்தவழி இயந்திரம்