பி.சி.ஆர். படிவாக்கம்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
பி.சி.ஆர் படிவாக்கம் (PCR Cloning) என்பது பாலிமரசு தொடர் வினையில் (Polymerase chain reaction) வரும் விளை பொருள்களை டி முனை பரப்பிகளில் (T-tail vector) நேரடியாக படிவாக்கம் செய்யப்படும் நிகழ்வு ஆகும். பாலிமரசு தொடர் வினைக்கு தெர்மசு அக்வாடிகசு (thermus aquaticus) என்ற நிலைகருவற்ற உயிரியில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டடி. என். ஏ பாலிமரேசு பயன்படுத்தபடவேண்டும். இவைகள் பாலிமரசு தொடர் விளை பொருள்களுக்கு அடினைன் என்ற டி.என்.ஏ துகளை கூடுதலாக இரு முனைகளில் உருவாக்கும் தன்மை கொண்டுள்ளன. இதனால் டி ( தயமின்) முனை பரப்பிகளில் அடினைன் முனை கொண்ட பி.சி.ஆர். விளை பொருட்கள் எளிதில் இணைவதற்கான வாய்ப்புகள் மிகையாக உள்ளன. டி முனை பரப்பிகளில் தயமின் இறுதி டிரன்பெரசு (terminal transferase) என்ற நொதியால் டி முனை உண்டாக்கப்படுகின்றன.