பி.டி. கத்தரிக்காய்
பிடி கத்தரிக்காய் (ஆங்கிலம்:Bt brinjal) என்பது மரபணு மாற்றக் கத்தரிக்காய் ஆகும். இது மண்ணுக்கடியில் இருக்கும் பாசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் பாக்டீரியாவிலிருந்து எடுக்கப்படும் மரபணுவைக்(Cry1Ac) கொண்டு மரபணு மாற்றம் செய்யப்படும் விதையிலிருந்து உருவாக்கப்படும் கத்தரிச் செடியாகும்.மஹிகோ பரணிடப்பட்டது 2014-01-05 at the வந்தவழி இயந்திரம் ஜல்னா, மகாராஷ்டிராவைச் சார்ந்த ஒரு இந்திய விதை நிறுவனத்தினால் பி.டி கத்தரிக்காய் உருவாக்கப்பட்டது.
இது நல்ல பூச்சி எதிர்ப்பு சக்தியும், அதிக விளைச்சலும், குறைந்த செலவும் மற்றும் குறைந்த சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டது. ஆனால் பி.டி. கத்தரிக்காயினால் மனித உடல் மற்றும் உயிர் பாதுகாப்பு, வாழ்வாதாரம் மற்றும் பல்லுயிர்க்கு பாதகமான தாக்கத்தை எற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.