பி. கல்யாணசுந்தரம்பிள்ளை

பி. கல்யாணசுந்தரம் பிள்ளை என்பவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். இவர் பிரித்தானிய இந்தியாவின், சென்னை மாகாணத்தின், கும்பகோணத்தில் 1912 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை பெயர் பொன்னையாப்பிள்ளை என்பவராவார். சிறுவயதிலிருந்தே காந்தியின் தத்துவங்களால் ஈர்க்கப்பட்ட அவர் நாட்டின் விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்றார். மே 1930 இல், ஆங்கிலேயர்களின் கொடுங்கோன்மை பற்றிய வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டியதற்காக ராமசாமியுடன் சேர்ந்து திருச்சிராப்பள்ளி சிறையில் ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் 1932 இல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றதால், ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அதே ஆண்டில் பத்திரிகை அவசரச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டு திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, 6, சனவரி, 1933 அன்று விடுவிக்கப்பட்டார்.[1]

1941 இல், அவர் தனது சொந்தத் தொழிலைத் தொடங்கினார், அதில் கிடைக்கும் வருமானத்தை ஏழைகளுக்கு உதவவும், மக்களிடையே சுதந்திர உணர்வை உருவாக்கவும் பயன்படுத்தினார்.

கல்யாணசுந்தரம் பிள்ளை திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் இருந்தபோது வி. நடேசனும் காக்காஜி ராமசாமியும் ஒரே அறையில் இருந்தனர். இந்திய அரசு, 1988 இல், இந்திய சுதந்திரத்தின் 41 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் அவருக்கு தாமிரப்பட்டம் வழங்கியது.

மேற்கோள்கள்

தொகு
  1. Mahotsav, Amrit. "P. Kalyanasundaram Pillai". Azadi Ka Amrit Mahotsav, Ministry of Culture, Government of India (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-10-14.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)