பி. கிருஸ்ணன்
பி. கிருஸ்ணன் (பிறப்பு: 1932), மலேசியாவின் ஜாகூர் மாநிலத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது ஆரம்பக் கல்வியை ஜாகூர் பாருவிலும், உயர்கல்வியை சிங்கப்பூரிலும் கற்று சீனியர் கேம்ப்ரிஜ் சான்றிதழைப் பெற்றார். சிங்கப்பூரில் முதல் கவிதை விழாவை வானொலியில் நடத்தியதுடன், கலாசார அமைச்சு, சமூக நல அமைச்சு, வானொலி, சமூக அமைப்புகள் போன்றவை நடத்திய பல போட்டிகளுக்கு நடுவராகவும் இருந்துள்ளார்.
பதவி
தொகுசிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக நிறுவனர்களுள் ஒருவரான இவர் துணைச் செயலாளராகப் பதவி வகித்தார்.
இலக்கியப் பணி
தொகு1952ல் எழுதத் தொடங்கிய இவர் புதுமைதாசன் எனும் புனைப்பெயரில் சிறுகதை, நாடகம், கட்டுரை, ஒலிச்சித்திரம் எனப் பல்துறைகளிலும் எழுதியுள்ளார். இவரது முதல் படைப்பாகிய ‘சாந்தி’ எனும் சிறுகதை தமிழ் முரசு நாளிதழில் வெளிவந்தது. இதுவரை இவர் 500க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியுள்ளதுடன் வானொலிக்காக சுமார் 40 சிறுகதைகளையும், வானொலி மற்றும் தொலைக்காட்சி, மேடை ஆகியவற்றிற்கு 360 நாடகங்களையும் எழுதியுள்ளார்.
எழுதியுள்ள நூல்கள்
தொகு- இலக்கியக் காட்சிகள்
- புதுமைதாசன் கதைகள்
- மெக்பத்
- அடுக்கு வீட்டு அண்ணாசாமி
பெற்ற விருதுகளும் கௌரவங்களும்
தொகு- தமிழ் முரசு. தமிழ் மாருதம் போன்ற இலக்கிய இதழ்களின் பாராட்டு
- புதுமைதாசன் எனும் நூலுக்கான பாராட்டுச் சான்றிதழ்
- தமிழவேள் விருது
உசாத்துணை
தொகு- சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு