பி. கே. ரோசி

இந்திய நடிகை

பி. கே. ரோசி (ராஜம்மா, ரோசம்மா, ராஜம்மாள்),[2] என்பவர் ஒரு புலைய (தலித்) (கிறிஸ்துவராக மதம் மாறியவர்)[3] பெண் நடிகையாவார். இவர் முதல் மலையாள மொழி திரைப்படமான ஜே. சி. டேனியல் இயக்கிய விகதகுமாரன் படத்தில் கதாநாயகியாக நடித்த மலையாளத்தின் முதல் கதாநாயகி ஆவார்.[4][5] இப்படத்தில் "சரோஜினி" என்ற நாயர் பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்தார்.

பி. கே. ரோசி
1928 இல் ரோசி
பிறப்பு1903[1]
திருவனந்தபுரம், தைகாடு
இறப்பு1988[1]
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1928–1930
பெற்றோர்பவுலோஸ், குஞ்சி[1]
வாழ்க்கைத்
துணை
கேசவ பிள்ளை[1]
பிள்ளைகள்பத்மா, நாகப்பன்[1]

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

இவர் 1903ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தின் நந்தன்கோடில் ஒரு புலையர் குடும்பத்தில் ரோசம்மாவாக பவுலோஸ் மற்றும் குஞ்சிக்கு மகளாக பிறந்தார். இவரது இளம் பருவத்திலிலேயே இவரது தந்தை இறந்துவிட்டதாகவும், இவரது குடும்பம் வறுமையில் உழன்றதாகவும் இவரது உறவினர்கள் உறுதிப்படுத்துகின்றனர். இவரது இளமைக்காலம் புல் அறுப்பவராக கழித்த. ஆனால் இவர் மிக இளம் வயதிலிருந்தே கலைகள் மீதான நம்பமுடியாத அளவு ஆர்வத்தைக் கொண்டிருந்தார்.  

அந்த நாட்களில், நடிப்பானது பெரும்பாலும் பெண்கள் செய்யும் வேலையாக இருக்கவில்லை. பெண்கள் நடிப்பது ஒரு கேவலமான தொழிலாக அல்லது "வேசி" தொழில் போன்றது என்று கருதபட்டது. ரோசியின் நடிப்பு மீதான காதல், இதனால் சமூகம் தன்னை எவ்வாறு அழைக்கும் என்ற கவலையையும் கடந்ததாகத் தெரிகிறது.[6]

இவரது குடும்பத்தினர் கிறித்துவ மதத்திற்கு மாறியதாகவும், இவரின் பெயரை ராஜம்மாவிலிருந்து ரோசம்மா என்றும் மாற்றினர்.[7] இவர் ஒரு கிறிஸ்தவர்[3] என்றும் கூறப்படுகிறது.

தொழில்

தொகு

1928ஆம் ஆண்டில் இயக்குநர் ஜே. சி. டேனியல் இவரை "கண்டுபிடிப்பதற்கு" முன்பே இவர் ஏற்கனவே ஒரு அனுபவமிக்க நடிகையாக இருந்தார். இவர் காக்கராஷி என்ற தமிழ் தலித் நாடக வடிவத்தில் திறமையானவர்.[8] இருப்பினும், இந்திய சமுதாயத்தில் தலித்துகள் வரலாற்று ரீதியாக "பிரதான நீரோட்ட" தொழில்களிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டு, மிகவும் இழிவான தொழில்களுக்குத் தள்ளப்பட்டு, ஆன்மீக ரீதியில் மாசுபட்டவர்களாகக் கருதப்பட்டனர்.  விகதுகுமாரன் படம் வெளிவந்தபோது, நிலப்பிரபுத்துவ நாயர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு தலித் பெண் நாயர் பெண்ணாக நடித்திருப்பதைக் கண்டு கோபமடைந்தனர். படவெளியீட்டின்போது ரோசி இருந்தால் நாங்கள் அதில் கலந்துகொள்ளமாட்டோம் என்று திரையுலகின் பிரபலங்கள் கூறிவிட்டனர். இதனால் இயக்குனர், டேனியல், திருவனந்தபுரத்தில் உள்ள கேபிடல் அரங்கில் பட வெளியீட்டு விழாவிற்கு இவரை அழைக்கவில்லை. ஆனால் ரோசி அதில் கலந்து கொள்ள எப்படியோ வந்துவிட்டார். ஆனால் இவரை இரண்டாவது காட்சியைக் காணுமாறு கூறி ரோசி வெளியேறும் வரை படத்தைத் வெளியிட மறுத்துவிட்டனர்.[9]

இவரிடம் கடுமை காட்டிய உயர் சாதியினரிமிருந்து தப்பி தமிழ்நாட்டிற்குச் சென்ற சரக்குந்தில் சென்றார். அந்த சரக்குந்து ஓட்டுநரான கேசவன் பிள்ளையை மணந்து, தமிழகத்தில் அமைதியாக தனது வாழ்க்கையை "ராஜம்மாள்" என்ற பெயரோடு கழித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.[10]

2013ஆம் ஆண்டில், கமல் இயக்கத்தில் டேனியலின் வாழ்கை வரலாற்றை செல்லுலாய்ட் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தனர். வினு ஆபிரகாமின் நஷ்ட நாயிகா புதினத்தை ஓரளவு தழுவி எடுக்கபட்ட இப்படம் ரோசியின் வாழ்க்கையையும் கொண்டதாக இருந்தது. புதுமுகம் சாந்தினி கீதா ரோசி வேடத்தில் நடித்தார்.[11] இவரது வாழ்க்கையைப் பற்றிய மேலும் இரண்டு படங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன: தி லாஸ்ட் சைல்ட் மற்றும் இது ரோசியே கதா (இது ரோசியின் கதை)[9] என்பவை ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "P K Rosy & the History Behind". Archived from the original on 11 July 2011. பார்க்கப்பட்ட நாள் 22 March 2019.
  2. Sebastian, Meryl Mary (June 2013). "The Name of the Rose". TBIP. பார்க்கப்பட்ட நாள் 20 May 2017.
  3. 3.0 3.1 Harikrishnan, Charmy (14 August 2016). "The return of Dalit heroine in Malayalam cinema". பார்க்கப்பட்ட நாள் 22 March 2019 – via The Economic Times.
  4. Pillai, Meena T. (7 March 2013). "The daughters of P.K. Rosy". பார்க்கப்பட்ட நாள் 22 March 2019 – via www.thehindu.com.
  5. Chelangad, Saju (8 December 2013). "History in retrospect". பார்க்கப்பட்ட நாள் 22 March 2019 – via www.thehindu.com.
  6. Pillai, Meena T.. "The daughters of P.K. Rosy" (in en). The Hindu. http://www.thehindu.com/features/cinema/the-daughters-of-pk-rosy/article4484922.ece. 
  7. Chelangad, Saju (24 November 2013). "The forgotten star". பார்க்கப்பட்ட நாள் 22 March 2019 – via www.thehindu.com.
  8. "Locating P K Rosy: Can A Dalit Woman Play a Nair Role in Malayalam Cinema Today?". Savari (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-06-05.
  9. 9.0 9.1 "The Name of the Rose | The Big Indian Picture". thebigindianpicture.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-06-05.
  10. Hariprasad R (2012-10-09), Rosiyude Kadha - Part 2 (The story of first Heroine of Malayalam Film Industry), பார்க்கப்பட்ட நாள் 2017-06-05
  11. Manalethu, Biju Cheriyan (22 January 2016). "Chandini Geetha - Film Actress, Singer". Cinetrooth. Archived from the original on 31 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 20 May 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கே._ரோசி&oldid=4115272" இலிருந்து மீள்விக்கப்பட்டது