பி. கௌசல்யா
பி. கௌசல்யா (P. Kausalya) (பிறப்பு 1975கள்) இந்தியவைச் சேர்ந்த எயிட்சு ஆர்வலராவார். இந்தியாவின் எயிட்சு பாதித்த நபர்களில் ஒருவராக இருப்பது குறித்து ஊடகங்களுடன் பேசிய முதல் பெண்மணியாக இவர் கவனிக்கப்பட்டார். இந்திய அரசு இவருக்கு 2015ஆம் ஆண்டில் நாரி சக்தி விருது வழங்கியது. எயிட்சு பாதித்த பெண்களின் உரிமைகளை வென்றெடுக்க "பாசிட்டிவ் உமன் நெட்வொர்க்" என்ற வலையமைப்பைத் தொடங்கிய நான்கு பேரில் இவரும் ஒருவர்.
பி. கௌசல்யா | |
---|---|
பிறப்பு | 1975கள் |
தேசியம் | இந்தியர் |
பணியகம் | "பாசிட்டிவ் உமன் நெட்வொர்க்"கை நடத்தி வருபவர் |
அறியப்படுவது | எயிட்சு இருப்பதாக ஒப்புக்கொண்ட முதல் இந்தியப் பெண் |
வாழ்க்கைத் துணை | இறந்து விட்டார் |
வாழ்க்கை
தொகுஇவர் 1975களில் பிறந்தார். இருபது வயதில் இவர் தனது உறவினரை மணந்தார். [1] இவருக்கு இரண்டு வயதாக இருந்தபோது இவரது தாய் இறந்துவிட்டதால், இவரது தந்தையாலும் அவரது இரண்டாவது மனைவியால் வளர்க்கப்பட்டார். இவர் தனது சித்தியுடன் ஒன்றினைய முடியவில்லை. [2]
திருமணம் மூலம் எயிட்சு
தொகுஇவரது தாய் இறக்கும் போதே இவரது உறவினருடனான திருமணத்தை உறுதி செய்திருந்தார். திருமணத்திற்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. பரிசோதனையில் இவருக்கு எயிட்சு பாதிப்பு இருந்ததாக தெரிந்தது. சரக்கு வாகன ஓட்டுநரான இவரது கணவர் திருமணத்திற்கு முன்பே எயிட்சு பாதித்தவராக இருந்துள்ளார். இவர் தனது கணவரிடமிருந்து நோய்த்தொற்றுக்கு ஆளானார். இவர்கள் இருவரும் விரைவில் "குணமடைவார்கள்" என்று கூறப்பட்டதை ஏற்றுக்கொண்டனர். அதற்குப் பின்னர் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஒரு மருத்துவர் தான் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளச் சொன்னதாக தெரிகிறது. பின்னர் இவர்கள் பிரிந்தனர். இவர் மீண்டும் திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கவில்லை.
ஊடகங்களில்
தொகுஇவர் தனது சொந்த வாழ்க்கையை கையில் எடுத்துக் கொண்டார். ஊடகங்கள் இவரது கதையைப் பகிர்வதில் ஆர்வமாக இருந்தன. இவர் தனது நிலைமையைப் பற்றி பேச வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். பின்னர் இவர் ஒரு துணிச்சலான முடிவை எடுத்து, எயிட்சு நோயாளியாகத் தன்னை வெளிபடுத்திக் கொண்டார். [3]
இந்த நேரத்தில் இவர் குழப்பமும் பயமும் அடைந்தார். மருத்துவர் சுனிதி சாலமன் செய்த மருத்துவ சிகிச்சை காரணமாக இவரது வாழ்க்கையை ஒழுங்காக திரும்பப் பெற அனுமதித்தது. இவர் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசினார். ஆனால், இவர் தனது புகைப்படத்தை வெளியிட அனுமதிக்க மறுத்துவிட்டார். இந்தியாவில் எயிட்சு நோயாளிகளின் இறப்பின் காரணத்தால் இவரும் இவரது குடும்பத்தினரும் கவலைப்பட்டனர். இவருடைய நெருங்கிய தோழர்கள் இவருடைய நிலையைப் பற்றி அறிந்த பிறகு, அவர்கள் இவரைத் தவிர்த்தார்கள். [2] 1999 ஆம் ஆண்டில் இவர் காசநோயாலும், மூளையுறை அழற்சி நோயாலும் மிகவும் பாதிக்கப்பட்டார். 300 ரூபாய் செலவாகும் மருந்துகளுக்கு 7,500 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருந்தது. அப்போது மருந்துகளுக்கு மானியம் வழங்கும் வசதி ஏற்படவில்லை. [4] அதிர்ஷ்டவசமாக இவரது மாமா இவரது மருந்துகளுக்கு பணம் கொடுக்க ஒப்புக்கொண்டார்.
ஊடகங்களுடன் பேசத் தயாராக இருக்கும் சில எயிட்சு நோயாளிகளில் ஒருவராக, பாகுபாடு மற்றும் எயிட்சு பாதித்த ஆண்கள் "அப்பாவி" யான பெண்களுடன் திருமணம் செய்வது பற்றிய விவாதிப்பதில் இவர் ஈடுபட்டார். [5]
வலையமைப்பு
தொகுவரலட்சுமி, ஜோன்ஸ் மற்றும் ஹேமா ஆகியோருடன் "பாசிட்டிவ் உமன் நெட்வொர்க்" என்ற வலையமைப்பின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார். இவர்கள் எயிட்சு தொடர்பான தகவல்களை வழங்க அரசாங்க அமைப்புகளுக்கு அழுத்தம் கொடுத்தனர். [6] ஆதரவற்ற பெண்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக அரசாங்கத்தை வற்புறுத்துவதற்கும், எயிட்சு பாதித்த விதவைகளுக்கு சமூக சிகிச்சைக்காக வாதிடுவதற்கும் புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இவர்கள் பயன்படுத்தினர்.
எச்.ஐ.வி / எயிட்சு நிர்வாகத்தின் ஒரு பகுதியாக எச்.ஐ.வி நோய்த்தொற்றுக்கான சிகிச்சைக்கான மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது ஊழியர்களின் நடத்தையை மேம்படுத்துவதற்காக மருத்துவமனைகளுக்குள் சிகிச்சையை வழங்குவதை கண்காணிக்கவும் இவர்களில் வலையமைப்பு அவர்களின் தன்னார்வலர்களில் ஒருவரை ஏற்பாடு செய்தது. [7]
விருது
தொகு2015 இல் அனைத்துலக பெண்கள் நாளில் இவருக்கு நாரி சக்தி விருது வழங்கப்பட்டது. [4] இவருடன் சேர்ந்து எட்டு பெண்களுக்கு இதேபோல் நாரி சக்தி விருது வழங்கப்பட்டது. [8] அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி இந்த விருதை வழங்கினார். [9]
2020 ஆம் ஆண்டில் அவர் "பாசிட்டிவ் உமன் நெட்வொர்க்" அமைப்பின் தலைவராக இருந்தார். எயிட்சு பாதித்த நபர்களுக்கு எதிரான பாகுபாட்டை எதிர்ப்பதாக வாதிடுகிறார். [10] உலக எயிட்சு நாளன்று அணிய சிவப்பு ரிப்பன்களை இருபது ரூபாய்க்கு விற்கிறார். பணம் தனக்கு முக்கியமானது என்று இவர் குறிப்பிடுகிறார். ஆனால் ரிப்பன்களை மக்கள் அணிந்துகொள்வது இதற்கான காரணத்தை ஆதரிக்கிறது என்பதைக் காட்டுகிறது என்கிறார். [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "World AIDS Day: Meet the first Indian Woman to come out openly as an AIDS victim". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-07-04.
- ↑ 2.0 2.1 Das, Deepannita (2019-03-28). "HIV+ At 20 And At 46 Her Positive Voice Is Helping 30,000+ HIV Positive Woman To Live Without Stigma". LifeBeyondNumbers (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-04.
- ↑ "World AIDS Day: Meet the first Indian Woman to come out openly as an AIDS victim". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-07-04.
- ↑ 4.0 4.1 4.2 "World AIDS Day: Meet the first Indian Woman to come out openly as an AIDS victim". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-07-04.
- ↑ Das, Dilip K. (2019-02-18). Teaching AIDS: The Cultural Politics of HIV Disease in India (in ஆங்கிலம்).
- ↑ Manian, Sunita (2017-06-14). HIV/AIDS in India: Voices from the Margins (in ஆங்கிலம்). Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-351-80648-0.
- ↑ Manian, Sunita (2017-06-14). HIV/AIDS in India: Voices from the Margins (in ஆங்கிலம்). Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-351-80648-0.
- ↑ DelhiMarch 9, IndiaToday in New; March 9, 2015UPDATED; Ist, 2015 14:43. "Stree Shakti Puraskar and Nari Shakti Puraskar presented to 6 and 8 Indian women respectively". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-03.
{{cite web}}
:|first3=
has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Nari Shakti Puraskar awardees full list". Best Current Affairs. 9 March 2017. பார்க்கப்பட்ட நாள் 2020-07-03.
- ↑ "HIV+ patients can get drugs for other health problems at ART clinics". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-07-04.