பி. டி. சரசுவதி

தமிழக அரசியல்வாதி

பி. டி. சரசுவதி (P. T. Saraswathy)(1935-2009) என்பவர் இந்தியா அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல்வாதி ஆவார். இவர் ம. கோ. இராமச்சந்திரன் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

சரசுவதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மாதேவியில் 13 மார்ச் 1935-ல் பிறந்தார். மதுரை லேடி டோக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் பயின்றார்.[1]

அரசியல் தொகு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) செயலாளராக இருந்த சரஸ்வதி, 1977 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் வேட்பாளரைத் தோற்கடித்து தமிழ்நாட்டின் ஆறாவது சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல்வர் ம. கோ. இராமச்சந்திரன் இவரைத் தனது அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக நியமித்தார்.[1][2] கல்விப் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலில் புதுமையான வழக்குப் பணிகளுக்கான அறக்கட்டளையின் சட்ட ஆலோசகராக இருந்தார்.[3]

இறப்பு தொகு

சரசுவதி மே 2009-ல் சென்னையில் உள்ள இவரது இல்லத்தில் இறந்தார். பல நாட்களாக இவரது வீடு பூட்டி கிடப்பதை அக்கம்பக்கத்தினர் பார்த்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்த பின்னரே இவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Tamil Nadu Legislative Assembly—Who's Who 1977. Chennai, Tamil Nadu: தமிழ்நாடு அரசு. 1977. பக். 187–88. http://www.assembly.tn.gov.in/archive/6th_1977/whoiswho1977.pdf. பார்த்த நாள்: 30 November 2017. 
  2. Menon, Jaya (13 March 2010). "MGR: The original 'ladies man'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/india/MGR-The-original-ladies-man/articleshow/5679011.cms. பார்த்த நாள்: 30 November 2017. 
  3. "Organisation". FICAS. பார்க்கப்பட்ட நாள் 30 November 2017.
  4. "Former AIADMK minister found dead". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 12 May 2009. http://www.hindustantimes.com/india/former-aiadmk-minister-found-dead/story-8zOPL6BIEOBvELUvIjjhvK.html. பார்த்த நாள்: 30 November 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._டி._சரசுவதி&oldid=3747609" இலிருந்து மீள்விக்கப்பட்டது