பி. பிரசன்ன குமார்

இந்திய அரசியல்வாதி

பி. பிரசன்ன குமார் [2] [3] [4] (B. Prasanna Kumar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பிரசன்ன குமார் பசவலிங்கப்பா என்றும் இவர் அறியப்படுகிறார். 1999 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை எலகங்கா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் [5] 2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை புலகேசிநகர் தொகுதியில் [6] [7] சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

பி. பிரசன்ன குமார்
சட்டப்பேரவைத் தொகுதி
பதவியில்
2008–2013
முன்னையவர்புதிய தொகுதி
பின்னவர்ஆர். அகந்த சிறீநிவாச மூர்த்தி
தொகுதிபுலகேசிநகர்
பதவியில்
1999–2008
முன்னையவர்சிவராச்சு
பின்னவர்எசு. ஆர். விசுவநாத்து
தொகுதிஎலகங்கா சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1993-1994[1]
முன்னையவர்பி. பசவலிங்கப்பா
பின்னவர்சிவராச்சு
தொகுதிஎலகங்கா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பிரசன்ன குமார் பசவலிங்கப்பா

70–71
பெங்களூர்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிHand INC இந்திய தேசிய காங்கிரசு
பெற்றோர்
  • பி. பசவலிங்கப்பா
வாழிடம்
முன்னாள் கல்லூரிமைசூர் பல்கலைக்கழகம், மகாராசா கல்லூரி
தொழில்அரசியல்வாதி

அரசியல் வாழ்க்கை தொகு

பி. பிரசன்ன குமார் தனது தந்தை பி. பசவலிங்கப்பாவின் (முன்னாள் அமைச்சர்) மரணத்திற்குப் பிறகு அரசியல் வாழ்க்கையில் நுழைந்தார். 1993 ஆம் ஆண்டில் இவரது தந்தையின் தொகுதியான எலகங்கா தொகுதியில் போட்டியிட்டார்

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

பி. பிரசன்ன குமார் 1953 ஆம் ஆண்டு சனவரி மாதம் 7 ஆம் தேதியன்று பி. பசவலிங்கப்பாவின் மகனாகப் பிறந்தார். இவருக்கு இலாவண்யா பிரசன்ன குமார் மற்றும் வருண் பிரசன்ன குமார் என 2 குழந்தைகள் உள்ளனர். மருத்துவர் லாவண்யா பிரசன்ன குமார் மருத்துவத் துறையில் பட்டம் பெற்ற ஒரு மருத்துவராக அறியப்படுகிறார். வருண் பிரசன்ன குமார் வணிக மேலாண்மை படித்த இரட்டை பட்டதாரி ஆவார். பி.பிரசன்னா குமாருக்கு எம்.தர்சன் குமார், எம்.கௌரவ் குமார், அன்சிகா வருண் பிரசன்னா குமார், மற்றும் சிரேயாசு வருண் பிரசன்னா குமார் என 4 பேரக்குழந்தைகள் உள்ளனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "Ninth Karnataka Legislative Assembly (ಒಂಭತ್ತನೇ ಕರ್ನಾಟಕ ವಿಧಾನ ಸಭೆ)". kla.kar.nic.in. http://kla.kar.nic.in/assembly/member/9assemblymemberslist.htm. 
  2. "B Prasanna Kumar's Profile, News, Photos, Constituency, Elections Details and Election Results with Analysis". பார்க்கப்பட்ட நாள் 2017-11-17.
  3. "Archived copy" (PDF). பார்க்கப்பட்ட நாள் 17 November 2017.
  4. "ಪುಲಿಕೇಶಿನಗರ ವಿಧಾನಸಭಾ ಕ್ಷೇತ್ರದ ಪರಿಚಯ". https://kannada.oneindia.com/elections/karnataka-assembly-elections-2013/constituencies/bangalore-pulakeshinagar-assembly-constituency-profile-072770.html. 
  5. "Yelahanka Elections Results 2014, Current MLA, Candidate List of Assembly Elections in Yelahanka, Karnataka". பார்க்கப்பட்ட நாள் 2017-11-17.
  6. "Pulakeshinagar Elections Results 2014, Current MLA, Candidate List of Assembly Elections in Pulakeshinagar, Karnataka". பார்க்கப்பட்ட நாள் 2017-11-17.
  7. "Hum Paanch! Pulakeshinagar MLA B Prasanna Kumar goes on a thanksgiving tour on Thursday with four newly elected corporators in his constituency". பார்க்கப்பட்ட நாள் 2017-11-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._பிரசன்ன_குமார்&oldid=3829978" இலிருந்து மீள்விக்கப்பட்டது