பி. வால்மீகி பார்த்தசாரதி
பி. வால்மீகி பார்த்தசாரதி (P. V. Parthasarathi) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1971 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 4 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். கர்நூல் மாவட்டத்தில் உள்ள அதோனி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். பாரதிய சனதா கட்சியை இவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் இவர் வெற்றி பெற்றார். இங்கு பாரதிய சனதா கட்சி தெலுங்கு தேசம் மற்றும் சனசேனா கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தது.[1]
பி.வி. பார்த்தசாரதி P. V. Parthasarathi | |
---|---|
2021 ஆம் ஆண்டில் பார்த்தசாரதி | |
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர் ஆந்திரப் பிரதேசம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2024 | |
முன்னையவர் | ஒய். சாய்பிரசாத்து ரெட்டி |
தொகுதி | அதோனி சட்டப் பேரவை |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி |
ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்
தொகுபார்த்தசாரதி ஆந்திரப்பிரதேசத்திலுள்ள அதோனி நகரத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு பல் மருத்துவர். இவரது தந்தையின் பெயர் பி. வி. நரசிம்முலு. இவரது மனைவியும் ஒரு மருத்துவர். விசயவாடாவில் உள்ள என். டி. ஆர் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஐதராபாத் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 1997 ஆம் ஆண்டில் குழந்தைகள் பல்மருத்துவத்தில் பார்த்தசாரதி முதுகலைப் பட்டம் பெற்றார்.[2]
அரசியல் வாழ்க்கை
தொகுபார்த்தசாரதி 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அதோனி தொகுதியில் பாரதிய சனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 89,929 வாக்குகளைப் பெற்று, தனது நெருங்கிய போட்டியாளரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான ஒய். எசு. ஆர் காங்கிரசு கட்சியின் ஒய். சாய் பிரசாத் ரெட்டியை 18,164 வாக்குகள் வித்தியாசத்தில் இவர் தோற்கடித்தார்.[3] [4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dr Partha Sarathi Valmiki, BJP Candidate from Adoni Assembly Election 2024 Seat: Electoral History & Political Journey, Winning or Losing - News18 Assembly Election 2024 Result News". www.news18.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
- ↑ "Dr. Partha Sarathi Valmiki(Bharatiya Janata Party(BJP)):Constituency- ADONI(KURNOOL) - Affidavit Information of Candidate". www.myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
- ↑ Sudhakar, Madhu (2024-05-01). "Andhra Pradesh: BJP's Parthasarathi on a mission to 'Save Adoni'". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
- ↑ "Adoni Assembly Election Results 2024: Adoni Election Candidates List, Election Date, Vote Share - IndiaToday". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.
- ↑ "Adoni Assembly Election Results 2024: Adoni Andhra Pradesh Election Schedule, Vote share and Results". Financialexpress (in ஆங்கிலம்). 2024-06-06. பார்க்கப்பட்ட நாள் 2024-06-23.