பி. வி. ரங்காராவ்

இந்திய அரசியல்வாதி

பாமுலபர்த்தி வெங்கட ரங்காராவ் (Pamulaparthi Venkata Ranga Rao) (1940 - 1 ஆகஸ்ட் 2013) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] [2] [3] இவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் பி. வி. நரசிம்ம ராவின் மகன் ஆவார்

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

ரங்காராவ், ஐதராபாத் இராச்சியம், கரீம்நகர் மாவட்டத்திலுள்ள வங்காரா என்ற கிராமத்தில் பி. வி. நரசிம்ம ராவ் மற்றும் அவரது மனைவி சத்யம்மா ஆகியோருக்குப் பிறந்தார். [4] இவர் உசுமானியா பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர். இவருக்கு, பி.வி.ராஜேஸ்வர் ராவ் மற்றும் பி. வி. பிரபாகர் ராவ் என்ற இரு இளைய சகோதர்கள் உட்பட ஐந்து சகோதரிகளும் இருந்தனர். இவர் தனது வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாகவே இருந்தார்.

தொழில்

தொகு

ராவ் வாரங்கல் மாவட்டத்திலுள்ள அனம்கொண்டா சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார். கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி அமைச்சரவையில் கல்வி அமைச்சராகப் பணியாற்றினார். ஆகஸ்ட் 1, 2013 அன்று இறந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "TRIBUTE: PV RANGA RAO A leader who let his heart rule his head". Archived from the original on 1 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 2 August 2013.
  2. Narasimha Rao’s son passes away - The Hindu
  3. PV Narasimha Rao's eldest son passes away | NDTV.com
  4. Ex-PM Narasimha Rao's son P V Ranga Rao is dead - The Times of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._வி._ரங்காராவ்&oldid=4109022" இலிருந்து மீள்விக்கப்பட்டது