பி. வி. ரமணா (விளையாட்டு வீரர்)
இந்திய கைப்பந்து விளையாட்டு வீரர்
புசார்லா வெங்கட ராமணா (Pusarla Venkata Ramana) என்பவர் முன்னாள் தொழில்முறை கைப்பந்து வீரர் மற்றும் இந்திய இரயில்வே ஊழியர் ஆவார். மேலும் அவர் இந்திய தேசிய கைப்பந்து அணி உறுப்பினராவார்.[1]
தனிநபர் தகவல் | |
---|---|
முழு பெயர் | புசர்லா வெங்கட ரமணா |
தேசியம் | இந்தியக் குடிமகன் |
பிறப்பு | தெலங்காணா, நிர்மல் மாவட்டம், நிர்மல் |
வசிப்பிடம் | தெலங்காணா, சிக்கந்தராபாத் |
பதக்கத் தகவல்கள் |
1986 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், வெண்கலப் பதக்கத்தை வென்ற கைப்பந்து அணியில் இருந்தார். 2000 ஆம் ஆண்டில் இந்திய கைப்பந்து அணியில் இவரது பங்களிப்புக்காக அருச்சுனா விருது வழங்கப்பட்டது.[2]
குடும்பம்
தொகுரமணனின் மனைவி விஜயா தேசிய அளவில் கைப்பந்து வீரராக இருந்துள்ளார். அவர்களின் இளைய மகள் சிந்து, ரியோ டி ஜெனிரோவில் 2016 ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஒரு இறகுப்பந்தாட்ட வீரர் ஆவார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "PV Sindhu's father offers prayers to their family deity in West Godavari". The New Indian Express. 19 August 2016. http://www.newindianexpress.com/states/andhra_pradesh/PV-Sindhus-father-offers-prayers-to-their-family-deity-in-West-Godavari/2016/08/19/article3587443.ece. பார்த்த நாள்: 19 August 2016.
- ↑ Sudhir, T.S. (19 August 2016). "Rio Olympics 2016: PV Sindhu's success stems from efforts of Gopichand and her father". F. Sports. http://www.firstpost.com/sports/rio-olympics-2016-pv-sindhus-success-stems-from-efforts-of-gopichand-and-her-father-2964662.html. பார்த்த நாள்: 19 August 2016.