நிர்மல் மாவட்டம்

நிர்மல் மாவட்டம் (Nirmal district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும். [2][3]தெலங்கானா மாநிலத்தின் வடக்குப் பகுதி மாவட்டமான ஆதிலாபாத் மாவட்டத்தின் நிர்மல் மற்றும் பைன்சா பகுதிகளைக் கொண்டு இம்மாவட்டம் அக்டோபர், 2016-இல் நிறுவப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நிர்மல் நகரம் ஆகும்.

நிர்மல் மாவட்டம்
மாவட்டம்
ஞான சரஸ்வதி கோயில், பசரா
ஞான சரஸ்வதி கோயில், பசரா
Map
நிர்மல் மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்தெலங்கானா
நிறுவிய ஆண்டு2016
தலைமையிடம்நிர்மல்
மண்டல்கள்19
அரசு
 • மக்களவை தொகுதிஅதிலாபாத்
 • சட்டமன்றத் தொகுதிகள்நிர்மல், கானாப்பூர், முத்தோல்
பரப்பளவு
 • Total3,845 km2 (1,485 sq mi)
மக்கள்தொகை (2011)
 • Total709,418
 • அடர்த்தி180/km2 (480/sq mi)
Demographics
 • எழுத்தறிவு57.77 %
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)
வாகனப் பதிவுTS–18[1]
இணையதளம்nirmal.telangana.gov.in
தெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்
நிர்மல் மாவட்டத்தின் வருவாய் கோட்டங்கள்

புவியியல் தொகு

தக்கான பீடபூமியில், கோதாவரி ஆற்றின் வடிநிலத்தில் அமைந்த நிர்மல் மாவட்டம் 3,845 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. [4] இம்மாவட்டத்தின் வடக்கில் ஆதிலாபாத் மாவட்டம், வடகிழக்கில் கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டம், கிழக்கில் மஞ்செரியல் மாவட்டம், தெற்கில் ஜக்டியால் மாவட்டம் மற்றும் நிசாமாபாத் மாவட்டங்களும், மேற்கில் மகாராட்டிரம் மாநிலத்தின் நாந்தேட் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளது.

மக்கள் தொகையியல் தொகு

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 3,845 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நிர்மல் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 7,09,418 ஆகும்.[4] பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1046 பெண்கள் வீதம் உள்ளனர். 78% மக்கள் ஊரகப்பகுதியில் வாழ்கின்றனர். மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 185 நபர்கள் வீதம் உள்ளது.

மாவட்ட நிர்வாகம் தொகு

நிர்மல் மாவட்டம், நிர்மல் மற்றும் பைன்சா என இரண்டு வருவாய் கோட்டங்களைக் கொண்டது. இவ்விரண்டு வருவாய் கோட்டத்தில் 19 வருவாய் வட்டங்கள் உள்ளது.[4][5] இம்மாவட்டத்தின் தற்போதைய மாவட்ட ஆட்சித் தலைவராக இளம்பாரதி உள்ளார்.[6]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Telangana New Districts Names 2016 Pdf TS 31 Districts List". Timesalert.com. 11 October 2016 இம் மூலத்தில் இருந்து 11 October 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161011142157/https://timesalert.com/telangana-new-districts-list/21462/. 
  2. "Nirmal district" (PDF). Chief Commissioner of Land Administration. Archived from the original (PDF) on 9 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 22 August 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "New districts map". newdistrictsformation.telangana.gov.in. பார்க்கப்பட்ட நாள் 22 August 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. 4.0 4.1 4.2 "New districts". Andhra Jyothy.com. 8 October 2016 இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225064351/http://www.andhrajyothy.com/artical?SID=320397. பார்த்த நாள்: 8 October 2016. 
  5. "Clipping of Andhra Jyothy Telugu Daily - Hyderabad". Andhra Jyothy. Archived from the original on 9 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 October 2016.
  6. "K Chandrasekhar Rao appoints collectors for new districts". Deccan Chronicle. 11 October 2016. http://www.deccanchronicle.com/nation/current-affairs/111016/k-chandrasekhar-rao-appoints-collectors-for-new-districts.html. பார்த்த நாள்: 13 October 2016. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்மல்_மாவட்டம்&oldid=3609560" இலிருந்து மீள்விக்கப்பட்டது