ஜக்டியால் மாவட்டம்
ஜக்டியால் மாவட்டம் (Jagtial district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும். கரீம்நகர் மாவட்டத்தின் ஜக்டியால் மற்றும் மெட்டப்பள்ளி என இரண்டு வருவாய் கோட்டங்களைக் கொண்டு இம்மாவட்டம் அக்டோபர், 2016-இல் நிறுவப்பட்டது. [1][2]இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஜக்டியால் நகரம் ஆகும்.

புவியியல்தொகு
3,043.23 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[3] ஜக்டியால் மாவட்டத்தின் வடக்கில் நிர்மல் மாவட்டம், வடகிழக்கில் மஞ்செரியல் மாவட்டம், தெற்கில் கரீம்நகர் மாவட்டம், தென்கிழக்கில் பெத்தபள்ளி மாவட்டம், மேற்கில் நிசாமாபாத் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளது.
மக்கள் தொகைதொகு
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜக்டியால் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை As of 2011[update] [[2011 9,83,414 ஆகும்.[3]
மாவட்ட நிர்வாகம்தொகு
ஜக்டியால் மாவட்டம் ஜக்டியால் மற்றும் மெட்டப்பள்ளி என இரண்டு வருவாய் கோட்டங்கள் கொண்டுள்ளது. இவ்விரு வருவாய் கோட்டங்களும் 18 மண்டல்களைக் கொண்டுள்ளது. [3]
மண்டல்கள்தொகு
ஜக்டியால் மற்றும் மெட்டப்பள்ளி வருவாய் கோட்டங்களில் உள்ள மண்டல்களின் விவரம்:[4]
வ. எண் | ஜக்டியால் வருவாய் கோட்டம் | # | மெட்டப்பள்ளி வருவாய் கோட்டம் |
---|---|---|---|
1 | ஜக்டியால் | 1 | கொருட்லா |
2 | ஜக்டியால் கிராமப்புறம் | 2 | மெட்டப்பள்ளி |
3 | ராய்க்கல் | 3 | மல்லப்பூர் |
4 | சாரங்கபூர் | 4 | இப்ராகிம்பட்டினம் |
5 | பீர்பூர் | 5 | மெடிப்பள்ளி |
6 | தர்மபுரி | 6 | கத்லாப்பூர் |
7 | பக்காரம் | ||
8 | பெகடாப்பள்ளி | ||
9 | கோலப்பள்ளி | ||
10 | மல்லியால் | ||
11 | கொடிமியால் | ||
12 | வேல்காட்டூர் |
இதனையும் காண்கதொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ "Jagtial district". பார்த்த நாள் 22 August 2016.
- ↑ "New districts map". பார்த்த நாள் 22 August 2016.
- ↑ 3.0 3.1 3.2 "New districts". Andhra Jyothy.com. 8 October 2016. http://www.andhrajyothy.com/artical?SID=320397. பார்த்த நாள்: 8 October 2016.
- ↑ http://newdistrictsformation.telangana.gov.in/uploads/gos-circulars/1476130075699226.Jagityal.pdf