பி. வெற்றிவேல்

இந்திய அரசியல்வாதி

பி. வெற்றிவேல் (P. Vetrivel)(1959 அல்லது 1960 - 15 அக்டோபர் 2020)[1] இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.

வாழ்க்கை தொகு

வெற்றிவேல் பெரம்பூர் தொகுதியிலிருந்து பதினைந்தாம் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 2016ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] முன்னதாக 2011ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆர். கே. நகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.சொத்து வழக்கில் தண்டனை பெற்றதால் ஜெ. ஜெயலலிதா பதவியை இழக்க ஏற்பட்டது. வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டபிறகு ஜெயலலிதா போட்டியட வசதியாக ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்..

முதலமைச்சர் எடப்பாடி க.பழனிசாமிக்கு அளித்த ஆதரவை திரும்பப்பெற்றதோடு, கிளர்ச்சித் தலைவர் டி. டி. வி. தினகரனுக்கு விசுவாசமாகி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்ததால் சபாநாயகர் ப. தனபாலால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.[3][4]

இறப்பு தொகு

கோவிட் பெருந்தொற்று காரணமாகச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் அக்டோபர் 15, 2020 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. Former Tamil Nadu MLA, AMMK treasurer P Vetrivel dies in Chennai hospital
  2. "General Election to Legislative Assembly Trends and Results 2016: Tamil Nadu : Constituency-wise Trends". Election Commission of India. 19 May 2016. Archived from the original on 16 August 2016. பார்க்கப்பட்ட நாள் 27 May 2018.
  3. Verdict on disqualification of 18 MLAs on June 14; Tamil Nadu on tenterhooks
  4. Echo of poll debacle: AMMK sees many jumping ship
  5. https://www.thehindu.com/news/national/tamil-nadu/former-mla-vetrivel-dead/article32866329.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._வெற்றிவேல்&oldid=3367954" இலிருந்து மீள்விக்கப்பட்டது