பீகார் வேளாண்மைப் பல்கலைக்கழகம்

பீகார் வேளாண்மைப் பல்கலைக்கழகம் என்பது பீகார் மாநில அரசாங்கத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும். இது 5 ஆகத்து,[2] 2010-ல் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் (ICAR) கீழ் பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள சபோரில் நிறுவப்பட்டது. இது தற்போது பீகார் விவசாயக் கல்லூரியில், மாநிலத்தின் பழமையான மற்றும் விவசாயக் கல்லூரியான சபோர் வளாகத்தில் அமைந்துள்ளது.

பீகார் வேளாண் பல்கலைக்கழகம்
உருவாக்கம்2010 (14 ஆண்டுகளுக்கு முன்னர்) (2010)
வேந்தர்பாகு சவுகான்
துணை வேந்தர்அஜய் குமார் சிங்[1]
அமைவிடம், ,
இணையதளம்www.bausabour.ac.in

விவசாய அறிவு பரப்புதல் அமைப்பு தொகு

பீகார் வேளாண்மைப் பல்கலைக்கழகம் விவசாயத் துறையில் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியைப் பீகார் விவசாயிகளுக்கு விரிவுபடுத்தும் வகையில், புதுதில்லியில் உள்ள உலக மேம்பாட்டு அறக்கட்டளையுடன் "விவசாயம் அறிவுப் பரவல் அமைப்பு" என்ற திட்டத்தைச் செயல்படுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.[3] இந்தத் திட்டமானது, தகவல் தொழில்நுட்பம் மற்றும் காணொளி காட்சி மாநாடு மூலம் மேம்படுத்தப்பட்ட விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்தி குறித்து விவசாயிகளுக்குக் கல்வி அளிப்பதை உள்ளடக்கியது.

கல்லூரிகள் தொகு

இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் பத்து கல்லூரிகள் செயல்படுகின்றன: [4]

  • பீகார் விவசாயக் கல்லூரி, சபூர்
  • போலா பாஸ்வான் சாஸ்திரி வேளாண் கல்லூரி, பூர்னியா
  • மந்தன் பாரதி வேளாண்மைக் கல்லூரி, அக்வான்பூர்
  • நாளந்தா தோட்டக்கலை கல்லூரி, நூர்சராய்
  • முனைவர் கலாம் வேளாண்மைக் கல்லூரி, கிஷன்கஞ்ச்
  • விகேஎஸ் வேளாண்மைக் கல்லூரி, டம்ரான்
  • முங்கர் வனவியல் கல்லூரி
  • விவசாய வணிக மேலாண்மை கல்லூரி பாட்னா
  • உயிர் தொழில்நுட்பவியல் கல்லூரி ஆரா
  • சமூக அறிவியல் மற்றும் உணவு தொழில்நுட்பக் கல்லூரி கயா

மேற்கோள்கள் தொகு

  1. Salomi, Vithika (13 January 2016). "BAU and RAU get new VCs - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/patna/BAU-and-RAU-get-new-VCs/articleshow/50566066.cms?from=mdr. பார்த்த நாள்: 29 January 2018. 
  2. "Bihar Agricultural University". www.bausabour.ac.in. Archived from the original on 2021-01-16. பார்க்கப்பட்ட நாள் 2021-01-13.
  3. "BAU and WDF sign MOU for agriculture project in Bihar". Bihar Foundation. Archived from the original on 3 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 29 November 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Bihar Agriculture University". www.bausabour.ac.in. பார்க்கப்பட்ட நாள் 3 November 2017.

https://www.business-standard.com/article/pti-stories/three-colleges-to-be-set-up-under-bihar-agriculture-university-118030800212_1.html

https://m.jagran.com/bihar/patna-city-mungers-first-forestry-college-in-the-province-will-14276270.html

வெளி இணைப்புகள் தொகு