பீச்சி அணை

கேரளத்தில் உள்ள அணை

பீச்சி அணை திரிசூர் என்பது இந்தியாவின் கேரளத்தில் உள்ள திருச்சூர் நகரத்திற்கு வெளியே. 22 km (14 mi) தொலைவில் அமைந்துள்ள ஒரு அணையாகும். இது திருச்சூரை சுற்றியுள்ள கிராமங்களுக்கு நீர்ப்பாசன திட்டங்களுக்காக கட்டபட்ட அணை ஆகும். அதே சமயத்தில், இது திருச்சூர் நகரத்தின் மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. நீர்ப்பாசன அணையாக செயல்படும் இந்த அணையிலிருந்து, திருச்சூர் நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள நெல் வயல்களுக்கும் நீர் சென்றடைகிறது. மணாலி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணை கிட்டத்தட்ட 3,200 ஏக்கர்கள் (1,300 ha) பரப்பளவைக் கொண்டுள்ளது. பீச்சி-வாழனி வனவிலங்கு சரணாலயத்தின் கரையில் யானைகளைக் காணலாம், இது 1958 ஆம் ஆண்டில் 125 சதுர கிலோமீட்டர்கள் (48 sq mi) பரப்பளவில் நிறுவப்பட்டது.

பீச்சி அணை திருச்சூர்
பீச்சி அணையின் கதவு
பீச்சி அணை is located in இந்தியா
பீச்சி அணை
Location of பீச்சி அணை திருச்சூர் in இந்தியா
பீச்சி அணை is located in கேரளம்
பீச்சி அணை
பீச்சி அணை (கேரளம்)
பீச்சி அணை is located in தமிழ் நாடு
பீச்சி அணை
பீச்சி அணை (தமிழ் நாடு)
அதிகாரபூர்வ பெயர்பீச்சி அணை
அமைவிடம்இந்தியா, கேரளம், திருச்சூர், பீச்சி
புவியியல் ஆள்கூற்று10°31′48″N 76°22′12″E / 10.530°N 76.370°E / 10.530; 76.370
கட்டத் தொடங்கியது1947
திறந்தது1957
இயக்குனர்(கள்)நீர்பாசணத் துறை, கேரளம்
அணையும் வழிகாலும்
உயரம்49.8 மீட்டர்
நீளம்213 மீட்டர்
அகலம் (அடித்தளம்)4.27 மீட்டர்
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்மணாலி ஆறு
கொள்ளளவு: tmc ft.

வரலாறு

தொகு
 
பீச்சி அணையின் நுழைவு

அப்போதைய கொச்சி சுதந்திர அரசின் முதல் பிரதம மந்திரியான ஈ. இக்கண்டா வாரியர் (1890-1977) பீச்சி அணையின் கட்டிடக் கலைஞர் ஆவார். திருச்சூரில் பெரும்பான்மையானவர்கள் இந்த அணை கட்டுவதை எதிர்த்தனர். கேரளத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் இந்த திட்டத்தை எதிர்த்ததால், அணை கட்ட ஆந்திராவிலிருந்து ஓய்வு பெற்ற தலைமை பொறியாளரை அழைத்து வந்தார். அணை 1959 இல் கட்டி முடிக்கப்பட்டது என்றாலும். 1957 அக்டோபர் 4, அன்றே கேரளத்தின் முதல் ஆளுநரான புர்குல ராமகிருஷ்ண ராவ் அணையைத் திறந்து வைத்தார்.[1]

 
பீச்சி அணையில் இருந்து பீச்சி -வாழனி வனவிலங்கு சரணாலயத்தின் தோற்றம்

புள்ளிவிவரம்

தொகு

கல்வி

தொகு
  • மெர்சி கான்வென்ட் எல்பி பள்ளி, பீச்சி
  • அரசு எல்பி பள்ளி, பீச்சி
  • அரசு மேல்நிலைப்பள்ளி, பீச்சி

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீச்சி_அணை&oldid=3747538" இலிருந்து மீள்விக்கப்பட்டது