புர்குல ராமகிருஷ்ண ராவ்

புர்குல ராமகிருஷ்ண ராவ் (Burgula Ramakrishna Rao, மார்ச் 13, 1899 – செப்டம்பர் 15, 1967) ஆந்திர மாநிலம் ஐதராபாத் மாநிலமாக இருந்தபோது முதலமைச்சராக இருந்தார்.

புர்குல ராமகிருஷ்ண ராவ்

பிறப்பு தொகு

புர்குல ராமகிருஷ்ண ராவ் படக்கல்லு எனும் ஊரில் தெலுங்கு பிராமணர் குடும்பத்தில் 13 மார்ச் 1899ல் பிறந்தார். இவர் வழக்கறிஞராகப் பணிபுரிந்நார்.

விடுதலைப் போராட்ட வீரர் தொகு

ஐதராபாத் மாநில விடுதலைக்காகப் பாடுப்பட்ட பலரில் இவரும் ஒருவர். நிஜாம் மன்னருக்கு எதிராகப் போரட்டாங்கள் செய்தார்[1]. இதனால் 1942லும், 1947லும் சிறைப்படுத்தப்பட்டார்.

முதலமைச்சரானார் தொகு

1952 இல் ஐதராபாத் மாநிலத்தில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசு சார்பில் போட்டியிட்ட டாக்டர் புர்குல ராமகிருஷ்ண ராவ் ஷாத்நகர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார், பின்னர் மாநில முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார்.

இவர் 6 மார்ச் 1952 முதல் 31 அக்டோபர் 1956 வரை முதலமைச்சராகப் பதவி வகித்தார். நவம்பர் 1956 முதல் ஜூலை 1960 வரை, டாக்டர் ராமகிருஷ்ண ராவ் கேரள மாநில ஆளுநராகவும் பின்பு 1962 வரை உத்தர பிரதேச ஆளுநராகவும் இருந்தார். பின்பு ராஜ்ய சபா உறுப்பினராக 1962 முதல் 1966 வரை பணிபுரிந்தார்.

மரணம் தொகு

இவர் செப்டம்பர் 14, 1967 இல் தனது 68 வயதில் மரணமடைந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "The Hindu : Briefly". Hinduonnet.com. 2004-03-14. Archived from the original on 2008-02-14. பார்க்கப்பட்ட நாள் 2010-12-03.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புர்குல_ராமகிருஷ்ண_ராவ்&oldid=3771900" இலிருந்து மீள்விக்கப்பட்டது