பீட்டர் கார்னாவிச்

பீட்டர் எம். கார்னாவிச் நோட்ரே டேம் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையின் தற்போதைய தலைவராக உள்ளார்.[1] கார்னாவிச் 2000 ஆம் ஆண்டில் நோட்ரே டேம் நிறுவனத்தில் உதவி பேராசிரியராக சேர்ந்தார் , மேலும் 2003 ஆம் ஆண்டில் இணை பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். 2008 ஆம் ஆண்டில் அவர் முழு பேராசிரியர் பதவியைப் பெற்றார். அவரது முதன்மை ஆராய்ச்சிப் பகுதி மீவிண்மீன் வெடிப்புகளும் அவற்றின் பன்முகத்தன்மை பற்றிய ஆய்வு ஆகும்.

Peter Garnavich
Born
பீட்டர் மார்க்கசு கார்னாவிச்



ஐக்கிய அமெரிக்கா
Nationality அமெரிக்கர்
Alma mater மேரிலாந்து பல்கலைக்கழகம் (1980),
மசாசூசட்சு தொழில்நுட்ப நிறுவனம் (1983),
வாழ்சிங்டன் பல்கலைக்கழகம் (1991)
Spouse இலாரா அரீல்லி பிலிப்சு
Awards
  • அண்டவியல் துறையில் குரூபர் பரிசு (2007)
  • அடிப்படை இயற்பியலில் திருப்புமுனைப் பரிசு (2015)
அறிவியல் தொழில்
நிறுவனங்கள் நோட்ரே டேம் பல்கலைக்கழகம்
ஆய்வறிக்கை உடுக்கணக் கோண ஒப்புறவு; பரந்த இரும
விண்மீன் பண்புகளுக்கான தடயங்கள் (1991)
முனைவர் ஆலோசகர் புரூசு மார்கன்
இணையதளம் www. nd. edu / pgarnavi /

இளமை, கல்வி தொகு

கார்னாவிச் 1980 இல் மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் வானியலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார் , 1983 இல் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் (எம்ஐடி) இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார் , 1991 இல் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் வானியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

ஆராய்ச்சி, தொழில் தொகு

அவர் 900 க்கும் மேற்பட்ட ஆவணங்களில் இணை ஆசிரியராக இருந்து வருகிறார் - 200 க்கும் மேற்பட்ட ஆவணங்களின் முதல் எழுத்தாளர் மற்றும் 69 உயர்சுட்டுகள் கொண்டவர்.[2]

எம்ஐடியில் தனது காலத்திற்குப் பிறகு , அவர் 1983 முதல் 1985 வரை விண்வெளி தொலைநோக்கி அறிவியல் நிறுவனத்தில் ஆராய்ச்சி உதவியாளராக பணியாற்றினார். 1992 முதல் 1995 வரை டொமினியன் வானியற்பியல் ஆய்வகத்தில் முதுமுனைவர் பட்டத்தை முடித்தார். கார்னாவிச் 1995 முதல் 1999 வரை ஆர்வர்டு, சுமித்சோனிய வானியற்பியல் மையத்தில் ஆய்வுறுப்பினராக இருந்தார். ஆர்வர்டில் அண்ட விரிவாக்கத்தின் முடுக்கத்தைக் கண்டுபிடித்த ஹை - இசட் மீவிண்மீன் வெடிப்புத் தேடல் குழுவில் முக்கிய உறுப்பினராக இருந்தார். அந்த கண்டுபிடிப்புக்கு 2011 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசும் , அண்டவியல் (2007) இல் குரூபர் பரிசும் , அடிப்படை இயற்பியலுக்கு (2015) திருப்புமுனைப் பரிசும் வழங்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. Peter Garnavich appointed chair of the Department of Physics
  2. "ADS Author Search". பார்க்கப்பட்ட நாள் August 30, 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_கார்னாவிச்&oldid=3769938" இலிருந்து மீள்விக்கப்பட்டது