பீட்டர் மில்னர்

கனடிய நரம்பியல் அறிவியலாளர்

பீட்டர் மில்னர் (Peter Milner) கனடாவைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானியாவார். 1919 ஆம் ஆண்டு சூன் மாதம் 13 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். கனடிய நரம்புசார் உளவியலாளர் பிரெண்டா மில்னர் இவருடைய மனைவியாவார். இங்கிலந்தின் இயோர்க்சயர் மாகாணத்தில் பீட்டர் பிறந்தார். 1944 ஆம் ஆண்டு மில்னர் கனடாவுக்குச் செல்வதற்கு முன்பு வரை பிரித்தானிய விமானப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் பணியாற்றி கொண்டிருந்தார்.

பீட்டர் ஒரு மின் பொறியியலாளராக இருந்தார், ஆனால் பிரெண்டா மெக்கில் பல்கலைக்கழகத்தில் நரம்பியல் அறிவியல் படித்துக் கொண்டிருந்த போது இவருக்கும் நரம்பியல் அறிவியலில் ஆர்வம் வந்தது. பிரெண்டாவுக்கு கற்பித்த அதே மேற்பார்வையாளரின் கீழ் பீட்டரும் கல்வி கற்று நரம்பியல் அறிவியல் பட்டதாரியானார்.

பின்னர் மெக்கில் பல்கலைக்கழகத்தில் பாடம் கற்பிக்கவும் தொடங்கினார். [1]இயேம்சு ஓல்ட்சுடன் இணைந்து, 1954 ஆம் ஆண்டு மூளையில் மின் தூண்டல் அல்லது இன்ப மையம் நடத்தை நடவடிக்கைகளுடன் தொடர்பு கொண்டு செயல்படுவதைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவரானார்.[2][3] இக்கண்டுபிடிப்பு நரம்பியல் சமூகத்தில் மிகுந்த ஆர்வத்தை உருவாக்கியது. கற்றல் மற்றும் நினைவகத்தின் நரம்பியல் பற்றிய குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகளுக்கு இது அடிப்படையாக அமைந்தது. போதைப் பழக்கத்தின் நரம்பியல் அடிப்படையை நன்கு புரிந்துகொள்ள வழிவகுத்தது.

2005 ஆம் ஆண்டு கனடிய உளவியல் சங்கம் உளவியலுக்கான புகழ்பெற்ற வாழ்நாள் பங்களிப்புகளுக்காக பீட்டர் மில்னருக்கு தங்கப் பதக்கத்தை வழங்கி சிறப்பித்தது. [1]

மில்னர் 2018 ஆம் ஆண்டு சூன் மாதம் 2 ஆம் தேதியன்று காலமானார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Salim Valji (11 June 2018). "Life Stories: Neuroscience pioneer Peter Milner taught at McGill". Montreal Gazette. https://montrealgazette.com/news/local-news/life-stories-neuroscience-pioneer-peter-milner-taught-at-mcgill. 
  2. Kringelbach, ML; Berridge, KC (June 2010). "The functional neuroanatomy of pleasure and happiness.". Discovery Medicine 9 (49): 579–87. பப்மெட்:20587348. 
  3. Edmund S. Higgins, Mark S. George (2009). Brain stimulation therapies for clinicians (1st ed.). American Psychiatric Pub. p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781585628902.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_மில்னர்&oldid=4171134" இலிருந்து மீள்விக்கப்பட்டது