பீட்டாபைட்டு
பீட்டாபைட் (Petabyte) என்பது அனைத்துலக முறை அலகுகளின் பீட்டா என்னும் முன்னொட்டை பைட் என்பதோடு சேர்ப்பதால் உருவானதாகும். இது கணினிகளின் தகவல் அளவு மற்றும் சேமிப்பளவைக் குறிப்பதற்காகப் பயன்படுகின்றது. பொதுவாக 1000 அல்லது 1024 டெராபைட் என்றவாறு கையாளப்படுகின்றது.
- 1 பிபை = 1,000,000,000,000,000 பைட் = 1015 பைட்.
பைட்டுக்களின் பெருக்கம்
| ||||
---|---|---|---|---|
SI இரும முன்னொட்டு | இரும பாவனை |
IEC இரும முன்னொட்டு | ||
பெயர் (குறியீடு) |
பெறுமானம் | பெயர் (குறியீடு)) |
பெறுமானம் | |
கிலோபைட்டு (KB) | 103 | 210 | கிபிபைட்டு (KiB) | 210 |
மெகாபைட்டு (MB) | 106 | 220 | மெபிபைட்டு (MiB) | 220 |
கிகாபைட்டு (GB) | 109 | 230 | கிபீபைட்டு (GiB) | 230 |
டெராபைட்டு (TB) | 1012 | 240 | டெபிபைட்டு (TiB) | 240 |
பீட்டாபைட்டு (PB) | 1015 | 250 | பெபிபைட்டு (PiB) | 250 |
எக்சாபைட்டு (EB) | 1018 | 260 | எக்ஸ்பிபைட்டு (EiB) | 260 |
செட்டாபைட்டு (ZB) | 1021 | 270 | செபிபைட்டு (ZiB) | 270 |
யொட்டாபைட்டு (YB) | 1024 | 280 | யொபிபைட்டு (YiB) | 280 |
உபயோகங்கள்
தொகுபல்வேறு துறைகளில் பீட்டாபைட்டின் பயன்பாடுகள்;
- மென்பொருள்: டெராடேட்டா டேட்டாபேஸ் 12 குறுக்கப்பட்ட 50 பீட்டாபைட் அளவு தரவுகளை சேமிக்கவல்லது.
- இணையம்: ஒவ்வொரு நாளும் கூகுள், 24 பீட்டாபைட் தரவுகளை கையாளுகிறது.
isohunt என்ற டொரண்ட் தளம் சூன் 2010-ல் 10.8 பீட்டாபைட் (அளவுள்ள?) கோப்புகளை வரிசைப்படுத்தியுள்ளது.
- தொலைதொடரபு: 19 பீட்டாபைட் தரவுகளை ஒவ்வொரு நாளும் AT&T கையாளுகிறது.
- திரைப்படம்: 'அவதார்' திரைப்படத்தின் முப்பரிமாண காட்சி உருவாக்கத்திற்கு Weta Digital-ல் 1 பீட்டாபைட் சேமிப்பகம் தேவைப்பட்டது.