பீனாலிக் அமிலம்

பீனாலிக் அமிலங்கள் (Phenolic acids) என்பவை ஒரு வகையான அரோமாட்டிக் அமிலச் சேர்மங்களாகும். இவை பீனால்கார்பாக்சிலிக் அமிலங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவ்வகைப்பாட்டில் உள்ள சேர்மங்களில் ஒரு பீனால் வளையமும், ஒரு கரிம கார்பாக்சிலிக் அமில வேதிவினைக் குழுவும் (C6-C1 கூடு) இடம் பெற்றிருக்கும். ஐதராக்சி பென்சாயிக் அமிலமும், ஐதராக்சி சின்னமிக் அமிலமும் மிக முக்கியமான இரண்டு இயற்கையில் தோன்றும் பீனாலிக் அமிலச் சேர்மங்கள் ஆகும். பீனாலிக் சேர்மங்களல்லாத பென்சாயிக் அமிலம் , சின்னமிக் அமிலம் ஆகிய சேர்மங்களிலிருந்து இவற்றை வழிபொருட்களாகத் தயாரிக்கலாம் [1].

தோற்றம்

தொகு

பல தாவர இனங்களில் பீனாலிக் அமிலங்கள் இயற்கையில் கானப்படுகின்றன. உலர் பழங்களில் இவை அதிகமாகக் காணப்படுகின்றன.

கொள்ளுப்பயறில் (மேக்ரோடைலோமா யூனிபுளொரம்) உள்ள இயற்கைப் பீனால்கள் யாவும் பெரும்பாலும் பீனாலிக் அமிலங்களேயாகும். 3,4-ஈரைதராக்சி பென்சாயிக், பாரா ஐதராக்சி பென்சாயிக், வனிலிக், காபியிக், பாரா-குமாரிக், பெருலிக், சிரிங்கிக் மற்றும் சினாபினிக் அமிலங்கள் போன்றவை சில அமிலங்களாகும் [2]. பாசிதியோமைசெட்டீசு இன காளான்களிலும் [3] பீனாலிக் அமிலங்கள் காணப்படுகின்றன. மண்ணில் காணப்படும் இலைமக்கு பொருட்களிலும் ஒரு பகுதிப்பொருளாக பீனாலிக் அமிலம் கலந்துள்ளது. பல பீனாலிக் அமிலங்கள் மனித சிறுநீரில் காணப்படுவதாக அறியப்படுகிறது. [4]

வேதியியல்

தொகு

அசைவற்ற கேந்திதா அண்டார்க்டிகா இலிபேசு பிளவானாய்டுகளை அசிட்டைலேற்றம் செய்வதற்கு பீனாலிக் அமிலத்தைப் பயன்படுத்துகின்றன [5].

மேற்கோள்கள்

தொகு
  1. Heleno, Sandrina A.; Martins, Anabela; Queiroz, Maria João R. P.; Ferreira, Isabel C. F. R. (2015-04-15). "Bioactivity of phenolic acids: metabolites versus parent compounds: a review". Food Chemistry 173: 501–513. doi:10.1016/j.foodchem.2014.10.057. பன்னாட்டுத் தர தொடர் எண்:0308-8146. பப்மெட்:25466052. 
  2. Kawsar, S.M.A.; Huq, E.; Nahar, N.; Ozeki, Y. (2008). "Identification and Quantification of Phenolic Acids in Macrotyloma uniflorum by Reversed Phase-HPLC". American Journal of Plant Physiology 3 (4): 165. doi:10.3923/ajpp.2008.165.172. 
  3. Barros, L.; Dueñas, M.; Ferreira, I. C.; Baptista, P.; Santos-Buelga, C. (June 2009). "Phenolic acids determination by HPLC–DAD–ESI/MS in sixteen different Portuguese wild mushrooms species". Food and Chemical Toxicology 47 (6): 1076–1079. doi:10.1016/j.fct.2009.01.039. பப்மெட்:19425182. 
  4. Armstrong, M. D.; Shaw, K. N.; Wall, P. E. (January 1, 1956). "The phenolic acids of human urine. Paper chromatography of phenolic acids" (pdf). The Journal of Biological Chemistry 218 (1): 293–303. பப்மெட்:13278337. http://www.jbc.org/content/218/1/293.full.pdf. 
  5. Direct acylation of flavonoid glycosides with phenolic acids catalysed by Candida antarctica lipase B (Novozym 435®). David E. Stevenson, Reginald Wibisono, Dwayne J. Jensen, Roger A. Stanley and Janine M. Cooney, Enzyme and Microbial Technology, 3 October 2006, Volume 39, Issue 6, Pages 1236–1241, எஆசு:10.1016/j.enzmictec.2006.03.006
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீனாலிக்_அமிலம்&oldid=2166612" இலிருந்து மீள்விக்கப்பட்டது