பீனாலேட்டுகள்
பீனாலேட்டுகள் (Phenolates) என்பவை பீனாலேட்டு அயனியைக் கொண்டிருக்கும் பீனால்களின் எதிர்மின் அயனிகள், உப்புகள் மற்றும் எசுத்தர்கள் ஆகியவற்றைக் குறிக்கும். இவற்றை பீனாக்சைடுகள் என்ற பெயராலும் அழைக்கலாம். பீனால்கள் வலிமையான காரத்துடன் வினைபுரிந்து பீனாலேட்டுகள் உருவாகின்றன.
பண்புகள்
தொகுசோடியம் பீனாலேட்டு போன்ற கார உலோக பீனாலேட்டுகள் நீரிய கரைசலில் நீராற்பகுப்படைந்து காரக் கரைசல்களை உருவாக்குகின்றன.[1] காரகாடித்தன்மைச் சுட்டெண் (pH) 10 ஆக இருக்கும் கரைசல்களில் பீனால் மற்றும் பீனாலேட்டு விகிதம் தோராயமாக 1:1 என்ற விகிதத்தில் இருக்கும். பீனாக்சைடு அயனி அதாவது பீனாலேட்டு என்பது கார்பன் எதிர்மின் அயனிகள் அல்லது மூவிணைய அமீன்களுடன் ஒப்பிடக்கூடிய ஒரு வலுவான அணுக்கருகவரியாகும்.[2] பொதுவாக, பீனாக்சைடு அயனிகளின் ஆக்சிசன் தாக்குதல் இயக்க ரீதியாக சாதகமானதாகும். அதேசமயத்தில் கார்பன்-தாக்குதல் வெப்ப இயக்கவியல் ரீதியாக விரும்பப்படுகிறது. ஒருவேளை வினை வீதம் பரவல் கட்டுப்பாட்டை அடைந்தால், கலப்பு ஆக்சிசன்/கார்பன் தாக்குதலும் தேர்ந்தெடுக்கும் திறன் இழப்பும் பொதுவாகக் காணப்படுகிறது.[3]
பயன்
தொகுசோடியம் பீனாலேட்டை ஆல்க்கைல் ஆலைடுடன் சேர்த்து சூடுபடுத்தினால் ஆல்க்கைல் அரைல் ஈதர்களை தயாரிக்க இயலும். இவ்வினை வில்லியாம்சன் ஈதர் தொகுப்பு வினை என்று அழைக்கப்படுகிறது:[4]
- C6H5ONa + CH3I → C6H5OCH3 + NaI
- C6H5ONa + (CH3O)2SO2 → C6H5OCH3 + (CH3O)SO3Na
சாலிசிலிக் அமிலம் தயாரிப்பு
தொகுகார்பன் டை ஆக்சைடு வாயுவுடன் சோடியம் பீனாலேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் கோல்பு-சிமிட்டு வினை நிகழ்ந்து சாலிசிலிக் அமிலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Jakubke, Hans-Dieter; Karcher, Ruth (1999). Lexikon der Chemie in drei Bänden, Band 3. Heidelberg: Spektrum Verlag. p. 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-8274-0381-2.
- ↑ [1]. Mayr’s Database of Reactivity Parameters. Retrieved July 10, 2019.
- ↑ Mayer, Robert J.; Breugst, Martin; Hampel, Nathalie; Ofial, Armin R.; Mayr, Herbert (2019-06-26). "Ambident Reactivity of Phenolate Anions Revisited: A Quantitative Approach to Phenolate Reactivities". Journal of Organic Chemistry 84 (14): 8837–8858. doi:10.1021/acs.joc.9b01485. பப்மெட்:31241938.
- ↑ Beyer, Hans; Walter, Wolfgang (1984). Organische Chemie. Stuttgart: S. Hirzel Verlag. pp. 463–464. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-7776-0406-2.