பீனோ அர்பெல்

பீனோ அர்பெல் (Beno Arbel) என்பார் 1939 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் நாள் வரை வாழ்ந்தார். இவர் ஒரு இஸ்ரேலிய கணிதவியலாளரும் கணித வரலாற்றாசிரியரும் ஆவார். இவர் டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராக பணியாற்றினார்.[சான்று தேவை]

பீனோ அர்பெல்
இயற்பெயர்בנו ארבל
பிறப்பு(1939-01-20)சனவரி 20, 1939
ட்ரேகனெஸ்டில் உள்ள ஓல்ட், உருமேனியா
இறப்புஏப்ரல் 9, 2013(2013-04-09) (அகவை 74)
எருசலேம், இஸ்ரேல்
Resting placeமெனுசா நீசோனா சிமெடெரி
பணியிடங்கள்டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் 
கல்வி கற்ற இடங்கள்புக்கரெஸ்ட் பல்கலைக்கழகம்
எருசலேமின் எபிரேய பல்கலைக்கழகம்
ஆய்வேடு (1987)
ஆய்வு நெறியாளர்மார்செல் கெர்சங்
Other academic advisorsஅர்யீக் டிவெட்க்

சுயசரிதை

தொகு

இவர் ருமேனியாவின் ட்ரேகனெஸ்டில் உள்ள ஓல்ட்டில் பிறந்தார். அர்பெல்,தனது கல்விப் படிப்பைத் புக்கரெஸ்ட் பல்கலைக்கழகத்தில் தொடங்கினார். இவர் 1961 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்த பிறகு எருசலேம் உள்ள எபிரேய படிப்பை பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தார். இவர் 1963 ஆம் ஆண்டு கணிதத்திலும் இயற்பியலிலும் தனது இளங்கலைப் படிப்பை முடித்தார்.இவர் 1965 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆர்யே டுவோரெட்ஸ்கியின் மேற்பார்வையில் கணிதத்தில் பட்டம் பெற்றார்.பட்டம் பெற்ற ஒரு மாதத்திற்குப் பிறகு இவர் இஸ்ரேல் பாதுகாப்புப் படையில் சேர்ந்தார். ஏர்பெல் தனது முனைவர் பட்டத்தை 1987ஆம் ஆண்டு மார்செல் ஹெர்சாக்கின் மேற்பார்வையில் எபிரேய பல்கலைக்கழகத்தில் பெற்றார். டெல் அவிவ் பல்கலைக்கழகம், கிப்புட்ஜிம் கல்லூரி, பீட் பெர்ல் கல்வியியல் கல்லூரி மேலும் டெல் அவிவ்-யாஃபோ கல்விக் கல்லூரி ஆகியவற்றில் கற்பித்தல் பணிபுரிந்தார்.[1]

1980 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து, டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் கணினி அறிவியலில் கல்வியில் திறமை பெற்ற இளம் மாணவர்களுக்கான திட்டத்தின் இயக்குநராக ஆர்பெல் பணியாற்றினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்

தொகு
  • Arbel, Beno (2009). מתמטיקאים ואירועים גדולים בתולדות המתמטיקה (in ஹீப்ரூ). Mofet Institute. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-073-75-999-78. இணையக் கணினி நூலக மைய எண் 386039009.
  • Arbel, Beno (2005). קיצור תולדות המתמטיקה (in ஹீப்ரூ). Mofet Institute. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 073-75-999-79. இணையக் கணினி நூலக மைய எண் 233482936.

மேற்கோள்கள்

தொகு
  1. "Ceremony in memory of Prof. Beno Arbel". Tel Aviv University. 28 April 2014. பார்க்கப்பட்ட நாள் 19 February 2019.

வெளிஇணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீனோ_அர்பெல்&oldid=3931415" இலிருந்து மீள்விக்கப்பட்டது