பீமிலி கடற்கரை
பீமிலி கடற்கரை (Bheemili Beach) என்பது இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் காணப்படும் ஒரு கடற்கரையாகும். கோசுதானி நதியில் இருந்து தோன்றும் இக்கடற்கரை விசாகப்பட்டினத்தில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. இக்கடற்கரையானது பிரித்தானியா மற்றும் டச்சுக்காரர்களின் ஆட்சிப்பகுதியைப் பிரதிபலிக்கிறது.
பீமிலி கடற்கரை Bheemili Beach | |
---|---|
பீமிலியில் உள்ள கோசுதானி நதி | |
அமைவிடம் | விசாகப்பட்டினம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
ஆள்கூறு | 17°31′57″N 83°16′20″E / 17.5324°N 83.2721°E |
இயக்குபவர் | VUDA |
வரலாறு
தொகுபிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் டச்சுக் கிழக்கிந்திய நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே வியாபாரத்திற்காகத் தங்கள் துறைமுகங்களை இங்கு வைத்திருந்தன.[1]
சுற்றுலா வளர்ச்சி
தொகுஉலக அளவில் சுற்றுலாத்துறையை விரிவாக்க விசாகப்பட்டினம் நகர்புற வளர்ச்சித் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக விசாகப்பட்டினம் – பீமிலி கடற்கரை சாலையில் ஒரு கடற்கரைப் பூங்காவை அமைத்தது. கடற்கரை நீளத்திற்கும் சுற்றுலா வசதிகளும் பல மேம்பாட்டுத் திட்டங்களையும் செயற்படுத்தி வருகிறது.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bheemili beach overview". visitvizag. பார்க்கப்பட்ட நாள் 30 June 2014.
- ↑ "Beach Park on Visakha-Bheemili Beach Road". Visakhapatnam Urban Development Authority. Archived from the original on 17 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 30 June 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Vizag-Bheemili beach corridor project". The Hindu (Hyderabad). 2 April 2014. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/rs-4588-crore-sanctioned-for-vizagbheemili-beach-corridor-project/article4572335.ece. பார்த்த நாள்: 30 June 2014.