புகுசிமா

(புகுஷிமா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புகுசிமா (福島市 ஃபுகுஷிமா-ஷி?, Fukushima-shi) [ɸu͍̥ku͍ꜜɕima] சப்பானிய மாநிலமான புகுசிமாவில் அமைந்துள்ள ஒரு நகராகும். இது இம்மாநிலத்தின் நடுப்பகுதியான நாகதோரிக்கு வடக்கே அமைந்துள்ளது.

புகுசிமா
福島市
புகுசிமா நகர்
புகுசிமா நகர்
புகுசிமா-இன் கொடி
கொடி
புகுசிமா மாநிலத்தில் புகுசிமாவின் அமைவிடம்
புகுசிமா மாநிலத்தில் புகுசிமாவின் அமைவிடம்
நாடுயப்பான்
பகுதிதொகோகு
மாநிலம்புகுசிமா மாநிலம்
அரசு
 • நகரத் தலைவர்கஒரு கொபயாசி
பரப்பளவு
 • மொத்தம்746.43 km2 (288.20 sq mi)
ஏற்றம்
67 m (220 ft)
மக்கள்தொகை
 (மே 1, 2011[1])
 • மொத்தம்2,90,064
 • அடர்த்தி390/km2 (1,000/sq mi)
நேர வலயம்ஒசநே+9 (சப்பானிய நியம நேரம்)
- மரம்செல்கோவா செர்ராட்டா[2]
- மலர்குழிப்பேரி[2]
- பறவைசாம்பற் சிட்டு[2]
தொலைபேசி இலக்கம்024-535-1111
முகவரி3-1 கொரோசிமாசி, புகுசிமா-சி, புகுசிமா-கென்
960–8601
இணையதளம்புகுசிமா நகர்

தற்கால புகுசிமா நகரானது முந்தைய மாவட்டங்களான சினோபு மற்றும் தத்தே மாவட்டங்களின் பெரும் பகுதியையும் முந்தைய அடாச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியுள்ளது. இந்நகரம் புகுசிமா வடிநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் அதனைச் சுற்றியுள்ள மலைகளுக்கு அருகில் அமைந்துள்ளது.

புறநகர்ப் பகுதிகளில் பல ஒன்சென்கள் எனப்படும் வெந்நீரூற்றுக்கள் அமைந்துள்ளன. இவற்றுள் ஈசாகா ஒன்சென், தகாயு ஒன்சென் மற்றும் சுசியு ஒன்சென் என்பன குறிப்பிடத்தக்கன. மேலும் புகுசிமாவில் குதிரைப் பந்தயத்திடலொன்றும் உள்ளது. இது சப்பானின் தொகொகு பிராந்தியத்தில் அமைந்துள்ள சப்பானிய குதிரைப்பந்தயச் சங்கத்தின் ஒரேயொரு குதிரைப்பந்தயத் திடலாகும்.

மே 2011ன் படி, இந்நகரின் மக்கள்தொகை 290,064 என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தப் பரப்பளவு 746.43 km²ஐக் கொண்ட இதன் மக்கள்தொகை அடர்த்தி சதுர கி.மீ.க்கு 390 பேராகும்.[1]

வரலாறு

தொகு

சோமொன் காலத்திலிருந்து கி.பி. 11ம் நூற்றாண்டு வரை

தொகு

பண்டைக்காலத்தில் இப்பகுதி மினெகோசி (岑越) என அழைக்கப்பட்டது. தற்போது சினோபு மலை என்று அழைக்கப்படும் நகரின் நடுவில் அமைந்துள்ள மலையும் முன்பு மினெகோசி மலை (岑越山) என்றே அழைக்கப்பட்டது.

சோமோன் காலப்பகுதியில் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக அபுகுமா ஆற்றின் கிழக்குக்கரையில் ஒரு பாரியக் குடியேற்றம் காணப்பட்டது. இப்பகுதி அகழ்வாய்வு செய்யப்பட்டு மியாகதா எச்சங்கள் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

புவியியல்

தொகு

புகுசிமா நகரானது, புகுசிமா மாகாணத்தின் மைய வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது இனவாசிரோ ஏரியிலிருந்து கிழக்கு நோக்கி அண்ணளவாக 50 கிமீ தொலைவிலும், டோக்கியோவிலிருந்து வடக்கு நோக்கி 260 கிமீ தொலைவிலும், சென்டாயிலிருந்து தெற்கே 80 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது மேற்கே ஓஉ மலைகளாலும், கிழக்கே அபுகுமா மேட்டுநிலங்களாலும் சூழப்பட்டுள்ளது. நகரின் பெரும்பாலான பகுதி புகுசிமா பள்ளத்தாக்கின் தென்கிழக்குப் பகுதி மற்றும் அருகிலுள்ள மலைகளிடையே அமைந்துள்ளது. நகரின் மேற்கே அசுமா மலையும், தென்மேற்கே அடதாரா மலையும் அமைந்துள்ளது.

புகுசிமாவுக்கு வடக்கே மியாகி மாகாணத்தின் சிரோசி மற்றும் சிசிகசுகு ஆகிய நகரங்களும், வடமேற்கே யமகாடா மாகாணத்தின் யொனேசவா மற்றும் டகாகடா நகரங்களும் அமைந்துள்ளன. புகுசிமா மாகாணத்தின் ஆட்சிப்பகுதிக்குள், மேற்கே இனவாசிரோ, தெற்கே நிகோன்மத்சு, கிழக்கே கவாமாடா மற்றும் டாதே, வடகிழக்கே கூரி ஆகியன அமைந்துள்ளன.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "ja:市町村別人口動態(平成23年3月1日~平成23年4月30日)" (in Japanese). Fukushima City. Archived from the original (XLS) on 27 செப்டம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 31 May 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: unrecognized language (link)
  2. 2.0 2.1 2.2 Fukushima Tourist Office Information Pamphlet - "A Letter from Fukushima."
  3. 福島都市圏総合都市交通体系予備調査 [Fukushima Municipal Area General State of Transportation Preliminary Investigation] (PDF) (in ஜப்பானியம்). Ministry of Land, Infrastructure, Transport and Tourism. 2007. பார்க்கப்பட்ட நாள் 31 May 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புகுசிமா&oldid=3777647" இலிருந்து மீள்விக்கப்பட்டது