புகைக்கரி (soot) என்பது நீரகக்கரிமங்களின் முழுமையடையாத எரிப்பின் விளைவாக ஏற்படும் தூய்மையற்ற கார்பன் துகள்களின் நிறையாகும். துல்லியமாக நோக்கின் இச்சொல் வாயு-கட்ட எரிப்பு செயல்முறையின் விளைபொருட்களோடு தொடர்பு படுத்தப்பட்டாலும், பொதுவாக நிலக்கரி, செனோஸ்பியர்கள், எரிந்த மரம், பெட்ரோலியக் கற்கரி போன்ற எரிக்கப்பட்டு எஞ்சிய எரிபொருள் துகள்களைக் குறிக்கவே இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. இன்னும் சரியாக இவை கற்கரி என்றும் கரிக்கட்டை எனவும் அடையாளம் காணப்படுகின்றன.

துகள் வடிகட்டி இல்லாத ஒரு பெரிய டீசல் வாகனத்தின் வெளியேற்ற வாயுவில் வெளிப்படும் புகைக்கரி
புகைக்கரி வெளிப்பாட்டால் வெளிப்புறம் கறுப்பு மாசுத் துகள்கள் படிந்த ஒரு அதிவிரைவு தொடருந்து.

புகைக்கரி பல்வேறு வகையான புற்றுநோயினையும் நுரையீரல் நோய்களையும் ஏற்படுத்துகிறது.[1][2][3]

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள் தரவுகள்

தொகு
  1. Omidvarborna (2015). "Recent studies on soot modeling for diesel combustion". Renewable and Sustainable Energy Reviews 48: 635–647. doi:10.1016/j.rser.2015.04.019. Bibcode: 2015RSERv..48..635O. 
  2. "Black Carbon: A Deadly Air Pollutant". NoMorePlanet.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-09-13. Archived from the original on 2021-03-04. பார்க்கப்பட்ட நாள் 2020-11-01.
  3. Sipkens et all (2023). "Overview of methods to characterize the mass, size, and morphology of soot". Journal of Aerosol Science 173. doi:10.1016/j.jaerosci.2023.106211. 

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
புகைக்கரி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  •   "Blacks". Encyclopedia Americana. 1920. 

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புகைக்கரி&oldid=4100899" இலிருந்து மீள்விக்கப்பட்டது