புக்ராச் பாப்னா
புக்ராச் பாப்னா (Pukhraj Bafna) ஓர் இந்தியக் குழந்தை மருத்துவர் மற்றும் இளம்பருவத்தினர் சுகாதார ஆலோசகர் ஆவார். பழங்குடியினர் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்கான ஆரோக்கிய மருத்துவத்தில் சிறந்த பங்களிப்புகள் செய்ததற்காக நன்கு அறியப்பட்டார்.[1] இந்திய அரசின் நான்காவது உயர் குடிமகன் விருதான பத்மசிறீ விருதை 2011 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் பாப்னாவுக்கு வழங்கி சிறப்பித்தது.[2][3]
புக்ராச் பாப்னா Pukhraj Bafna | |
---|---|
பிறப்பு | 14 நவம்பர் 1946 ராச்நந்தகாவுன், சத்தீசுகர், இந்தியா |
பணி | குழந்தைகள் நல மருத்துவர் |
விருதுகள் | பத்மசிறீ தேசிய சி. டி. தக்கார் விருது பெக்கான் பன்னாட்டு விருது மகாவீர் மகாத்மா விருது |
வலைத்தளம் | |
http://drpukhrajbafna.com |
வாழ்க்கை
தொகுபுக்ராசு இந்திய மாநிலமான சத்தீசுகரில் ராச்நந்துகாவுன் மாவட்டத்தில் 1946 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி பிறந்தார்.[1][4] சபல்பூரில் உள்ள நேத்தாசி சுபாசு சந்திரபோசு மருத்துவக் கல்லூரியில் 1969 ஆம் ஆண்டு பாப்னா மருத்துவத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார், மேலும் 1972 ஆம் ஆண்டில் குழந்தை மருத்துவத்தில் பட்டயமும் மற்றும் குழந்தை மருத்துவ முதுநிலை பட்டத்தை 1973 ஆம் ஆண்டிலும் பெற்றார். [1][5] பின்னர் இராசத்தான் மாநிலத்தின் லத்னு நகராட்சியிலுள்ள செயின் விசுவ பாரதி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தை பெற்றார். [1][5]
இந்தியாவில் பழங்குடியின குழந்தைகள் ஆரோக்கியத்தின் நிலை என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டு பாப்னா அனைவராலும் அறியப்பட்டார். 1973 ஆம் ஆண்டு முதல் சபேரா சாங்கெட் எனும் இந்தி மொழி செய்தித்தாளில் சுகாதாரம் தொடர்பான கட்டுரைகளை 40 ஆண்டுகளாக தொடர்ந்து எழுதி வந்தார்.[6][7] மேலும் புக்ராசு பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டுள்ளார். பல மாநாடுகளுக்கு தலைமையும் தாங்கினார்.[1]கருத்தரங்குகள் பலவற்றில் கலந்துகொண்டதோடு பல மாநாடுகளுக்குத் தலைமையும் தாங்கியுள்ளார்.[1]
புக்ராசு 500 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட குழந்தை சுகாதார முகாம்களை நடத்தியுள்ளார். மேலும் சத்தீசுகர் மாவட்டதில் உள்ள பசுதர் என்ற ஊரில் போர்க்களத்தில் உயிரை இழந்த பெற்றோர்களின் 149 அனாதைக் குழந்தைகளுக்கு ஆதரவளித்தார்.[1] புக்ராசு சத்தீசுகரின் ராச்நந்துகாவுன் நகரில் வசித்தார்.[8]
விருதுகள்
தொகு1978 ஆம் ஆண்டு இந்திய மருத்துவ சங்கம் தேசிய சி. டி. தக்கார் விருதை வழங்கி இவரை சிறப்பித்தது. 1986 ஆம் ஆண்டு பெக்கான் பன்னாட்டு விருதையும் பாப்னா பெற்றார்.[1] டைம்சு ஆப் இந்தியா குழுமத்திலிருந்து வழங்கப்படும் மகாவீர் மகாத்மா விருதையும், இந்திய குழந்தைகள் கல்விக்கழகம் வழங்கும் சிறப்பு விருதையும் 2004 ஆம் ஆண்டில் பெற்றுள்ளார்.[1] இராசத்தான் சமண விசுவ பாரதி பல்கலைக்கழகம் மற்றும் கேரள மாநில அரசாங்கமும் இவருக்கு சிறந்த குடிமகன் விருதை வழங்கி கவுரவித்தன. 2011 ஆம் ஆண்டு இந்திய அரசின் நான்காவது உயர் குடிமகன் விருதான பத்மசிறீ விருதை இந்திய அரசாங்கம் பாப்னாவிற்கு வழங்கி சிறப்பித்தது.[1][2][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 "AACCI". AACCI. 2014. பார்க்கப்பட்ட நாள் 24 November 2014.
- ↑ 2.0 2.1 "Padma Shri" (PDF). Padma Shri. 2014. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
- ↑ "Tribune". Tribune. 1 January 2008. பார்க்கப்பட்ட நாள் 24 November 2014.
- ↑ 4.0 4.1 "Chhattisgarh News". Chhattisgarh News. 24 March 2011. Archived from the original on 29 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 24 November 2014.
- ↑ 5.0 5.1 "SMHRC". SMHRC. 2014. Archived from the original on 29 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 24 November 2014.
- ↑ "Savera Sanket". Chhattisgarh News. 2014. பார்க்கப்பட்ட நாள் 24 November 2014.
- ↑ "Sabera Sanket". IU Raipur. 2014. Archived from the original on 11 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 24 November 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Parenting Nation". Parenting Nation. 2014. பார்க்கப்பட்ட நாள் 24 November 2014.