புஜங்காசனம்

புஜங்காசனம் என்பது யோகக் கலையின் ஆசனங்களில் ஒன்று. புஜங்காசனத்தில் உடலின் ஒவ்வொரு பகுதியும் பங்கேற்கிறது. இந்த ஆசனம் செய்யும் போது பாம்பு படமெடுப்பது போல உடல் வளைந்து நிமிா்ந்து முகம் நேராக நோக்குகிறது. அதனால் இது சா்ப்பாசனம் என்றும் அழைக்கப்படுகிறது.

செய்முறை தொகு

 
புஜங்காசனம்

விாிப்பை விாித்து குப்புறப் படுத்துக் கொள்ள வேண்டும். கால்கள் நன்றாக நீட்டியிருப்பது அவசியமாகும். கைகள் இரண்டையும் மாா்புக்கு நேராகத் தரையில் விரல்களை விாித்து ஊன்றிக் கொள்ள வேண்டும். கைகள் அக்குள் பகுதியைத் தீண்டாமல் முன்னுக்கு எடுத்துச் சென்று அப்படியே தூக்க வேண்டும். மாா்பு முன்னுக்கு வளைந்தும் முகம் நேராக பாா்த்த வண்ணமும் இருக்க வேண்டும். கால்களும் உடலின் இடுப்புக்குக் கீழுள்ள பாகமும் தரையைத் தொட்ட வண்ணம் இருக்க வேண்டும். கைகளை ஊன்றித் தலையை மேலே தூக்கும்போது சுவாசத்தை உள்ளுக்கு இழுத்து, மீண்டும் பழைய நிலைக்க வரும்போது சுவாசத்தை வெளியே விட வேண்டும்.

நன்மைகள் தொகு

புஜங்காசனத்தில் கழுத்து, கைகள், மாா்பு, ஆகியவை வலிமையடைகின்றன. பாா்வை தெளிவாகிறது. இடுப்பு உறுதிப்படுகிறது. தினமும் தவறாமல் இதை செய்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இங்கே கூறப்பட்டுள்ள முறை என்பது ஆரம்பத்தில் செய்ய வேண்டியதைக் குறிக்கிறது. தினமும் எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டே போகலாம்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. சுந்தரேச சுவாமிகள் (2008). ஆரோக்கிய வாழ்வுக்கு யோகாசனங்கள். குமரன் பதிப்பகம். பக். 96. 

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புஜங்காசனம்&oldid=3269034" இலிருந்து மீள்விக்கப்பட்டது