புட்டண்ணா
இந்திய அரசியல்வாதி
புட்டண்ணா (Puttanna) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதியன்று கர்நாடக மாநிலம் கடங்கனகள்ளி கிராமத்தில் இவர் பிறந்தார்.[2] வரலாறு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். விவசாயியாகவும் சமூக சேவகராகவும் செயல்பட்டார். கர்நாடக அரசியலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராகச் செயல்பட்டார். பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராகவும் இருந்தார். புட்டண்ணா பெங்களூரு ஆசிரியர் தொகுதியில் இருந்து சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கர்நாடகா சட்ட மேலவையின் துணைத் தலைவராக பணியாற்றினார்.[3][4] 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் விமலா கவுடாவிடம் தோல்வியடைந்த பின்னர் 2014 ஆம் ஆண்டில் அந்த இடத்தை மீண்டும் பெற்றார்.
புட்டண்ணா Puttanna | |
---|---|
கர்நாடக சட்டமன்றக் குழு துணைத் தலைவர் | |
பதவியில் 15 சூலை 2014 – 30 சூலை 2015 | |
முன்னையவர் | விமலா கவுடா |
பின்னவர் | மரிதிப்பே கவுடா |
பதவியில் 21 சனவரி 2009 – 14 சனவரி 2011 | |
முன்னையவர் | சச்சிதானந்த எல். கோட்டு |
பின்னவர் | விமலா கவுடா |
கர்நாடக சட்டமன்றம் | |
பதவியில் 10 நவம்பர் 2020 – 09 மார்ச்சு 2023[1] | |
தொகுதி | பெங்களூர் ஆசிரியர்கள் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 22 ஏப்ரல் 1966 கடங்கனகள்ளி |
தேசியம் | இந்தியாn |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு (2023 முதல்) |
பிற அரசியல் தொடர்புகள் | பாரதிய சனதா கட்சி (2020 - 2023) சமய சார்பற்ற சனதா தளம் (2020 ஆம் ஆண்டுக்கு முன்னர்) |
கல்வி | முதுகலை வரலாறு |
வேலை | வேளாண்மை & சமூகப்பணி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Karnataka: Four-time BJP MLC jumps ship to Congress".
- ↑ "ಸದಸ್ಯರು, ಕರ್ನಾಟಕ ವಿಧಾನ ಪರಿಷತ್ತು". Karnataka Legislature.
- ↑ "Puttanna is Council Deputy Chairman". டெக்கன் ஹெரால்டு (in ஆங்கிலம்). 2014-07-16. பார்க்கப்பட்ட நாள் 2023-02-19.
- ↑ "Puttanna elected Deputy Chairperson of Council" (in en-IN). தி இந்து. 2014-07-15. https://www.thehindu.com/news/national/karnataka/puttanna-elected-deputy-chairperson-of-council/article6214419.ece.