புட்டா சுதாகர் யாதவ்

புட்டா சுதாகர் யாதவ் (Putta Sudhakar Yadav) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். தொழிலதிபருமாக இருந்த இவர் திருமலை திருப்பதி தேவசுதானத்தின் அறங்காவலர் குழுவின் முன்னாள் தலைவராக இருந்தார்.[1] 1964ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.

புட்டா சுதாகர் யாதவ்
Putta Sudhakar Yadav
திருமலை திருப்பதி தேவசுதானம், தலைவர்
பதவியில்
28 ஏப்ரல் 2018 – 19 சூன் 2019
பின்னவர்ஒய்.வி. சுப்பா ரெட்டி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 நவம்பர் 1964 (1964-11-21) (அகவை 59)
கோத்தபள்ளி, புரோட்டத்தூர், கடப்பா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
துணைவர்விசயலட்சுமி
பிள்ளைகள்இரவி குமார் யாதவ், மகேசு குமார் யாதவ்
பெற்றோர்புட்டா வெங்கட சுப்பையா, போலம்மா
வாழிடம்புரோட்டத்தூர்

அரசியல் வாழ்க்கை

தொகு

புட்டா சுதாகர் யாதவ் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மைடுகூர் சட்டமன்றத் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு 11,522 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஆந்திரப் பிரதேச அரசால் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் தேதியன்று திருமலை திருப்பதி தேவசுதானத்தின் அறங்காவலர் குழுவின் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.[2] பின்னர் இவர் 11 ஏப்ரல் 2018 அன்று திருமலை திருப்பதி தேவசுதானத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[3] 2019ஆம் ஆண்டு சூன் மாதம் 19 அன்று பதவி விலகினார்.[4]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புட்டா_சுதாகர்_யாதவ்&oldid=4021477" இலிருந்து மீள்விக்கப்பட்டது