புதினா வரிசை

புதினா வரிசை (mint order; தாவர வகைப்பாட்டியல்: Lamiales) என்பது பூக்கும் தாவரங்களின் வரிசைகளில் ஒன்றாகும். இத்தாவர வரிசை தாரகைத் தாவரம் என்ற உயிரிக்கிளையின் கீழ் அமைகிறது. இவ்வரிசையின் கீழ் ஏறத்தாழ 23,810 இனங்களும், 1,059 பேரினங்களும், இவையனைத்தும் 25 குடும்பங்களும் உள்ளன.[2] லேமியேல்சு (Lamiales) என்பதில் ஏல்சு(ales) என்பது வரிசைக்குரிய பின்னொட்டு ஆகும். மீதமுள்ள லேமியா(Lamia) என்ற சொல்லானது கிரேக்க, இத்தாலிய நகரங்களைக் குறிக்கிறது. பழைய கிரேக்கத்தில் 'அழகிய மாயக்காரியைக்' குறிக்கிறது. பூக்கும் தாவரங்களின் வரிசை என்பதால், அதன் பூக்களின் வடிவமைப்பைக் கருத்தில் கொண்டு தமிழில் இவ்வரிசையை ஈரிடைநுகப்பூத் தாவரம் என்றழைக்கலாம்.[3]

புதினா வரிசை
புதைப்படிவ காலம்:முன் இயோசீன்-Recent[1]
Galeopsis speciosa
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
Families

மேற்கோள்கள் தொகு

  1. M. E. J. Chandler. 1964. The Lower Tertiary Floras of Southern England. IV. A summary and survey of findings in the light of recent botanical observations.
  2. Allaby, Michael, தொகுப்பாசிரியர் (2019) (in en). A Dictionary of Plant Sciences (4 ). Oxford University Press. doi:10.1093/acref/9780198833338.001.0001. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-883333-8. 
  3. Zygomorphic ("yoke shaped", "bilateral" – from the Greek ζυγόν, zygon, yoke, and μορφή, morphe, shape) flowers are predominantly present.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதினா_வரிசை&oldid=3907769" இலிருந்து மீள்விக்கப்பட்டது