புதிய அரண்மனை, கோலாப்பூர்

மகாராட்டிர அரண்மனை

புதிய அரண்மனை, கோலாப்பூர் என்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கோலாப்பூர் என்னும் இடத்தில் அமைந்துள்ள ஓர் அரண்மனை ஆகும். இந்த அரண்மனையைக் கட்டி முடிப்பதற்கு 7 ஆண்டுகள் ஆயின. 1877 ஆம் ஆண்டு முதல் 1884 ஆம் ஆண்டு வரை இதன் கட்டுமானப் பணி நடைபெற்றது. இதன் கட்டுமானச் செலவு ஏழு லட்சம் ரூபாய் ஆகும். கருப்பு நிற மெருகூட்டப்பட்ட கல்லில் கட்டப்பட்ட இந்திய கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த மாதிரியாக இந்த அரண்மனை அமைந்து காணப்படுவதால், இது சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கிறது.

புதிய அரண்மனை, கோலாப்பூர்
புதிய அரண்மனை, கோலாப்பூர்
Map
அமைவிடம்புதிய அரண்மனை, கோலாப்பூர், மகாராஷ்டிரா 416 003, இந்தியா

அரண்மனை வளாகம்

தொகு

இந்த அரண்மனை வளாகம் ஒரு தோட்டம், நீரூற்று மற்றும் மல்யுத்த மைதானம் உள்ளிட்டவற்றைக் கொண்டு விரிவாக அமைந்துள்ளது. முழு கட்டிடமும் எட்டு கோண வடிவத்தில் உள்ளது. அதன் நடுவில் ஒரு கோபுர அமைப்பு உள்ளது. அதில்1877 ஆம் ஆண்டில் ஒரு கெடிகாரம் பொருத்தப்பட்டது. ஆங்காங்கே சிறிது தூர இடைவெளியில் சிறிய கோபுரங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு கண்ணாடியிலும் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையின் நிகழ்வுகள் வரையப்பட்டுள்ளன. ஒரு மிருகக்காட்சி சாலையும் ஒரு ஏரியும் உள்ளன. இன்றும், இது மராட்டிய பேரரசின் நிறுவனர் சத்ரபதி சிவாஜி மகாராஜின் நேரடி வம்சாவளியான சத்ரபதி ஷாஹுவின் வசிப்பிடமாக இருந்து வருகிறது.

மந்தின் தலைசிறந்த படைப்பாக கோலாப்பூரில் உள்ள புதிய அரண்மனையைக் கூறலாம். இது பௌசிங்ஜி சாலையில் வடக்கே 1.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மருத்துவ மனையினைப் போலவே அதே ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த வளாகம், பாசால்ட் மற்றும் மணற்கல் ஆகியவற்றைக் கொண்ட மாறுபட்ட அம்சங்களில் அமைந்த ஒரு புதிய பாணியைக் கொண்டு அமைந்துள்ளது.பிரதான தெற்கு முகப்பில் இரட்டை மாடி வரம்பு உள்ளது. நியோ-முகலாய பாணியைச் சேர்ந்த வளைவுகள் மற்றும் மேலே கோயில் போன்ற நெடுவரிசைகள் மற்றும் அடைப்புக்குறி போன்ற அமைப்புகள் உள்ளன. வளைவு கார்னிஸ்கள் மற்றும் சிறிய குவிமாடங்களால் மூடப்பட்ட ட்ரெஃபோயில் வளைவுகளால் இந்த அமைப்பு தடைபட்டுள்ளதைப் போல காணப்படுகிறது. அதே கூறுகள் எண்கோண மூலையில் கோபுரங்களை கொண்டு அமைந்துள்ளன.

ஷாஹாஜி சத்ரபதி அருங்காட்சியகம்

தொகு

புதிய அரண்மனையின் தரை தளத்தில் ஷாஹாஜி சத்ரபதி அருங்காட்சியகம் இயங்கி வருகிறது. இது கோலாப்பூர் ஆட்சியாளர்களின் நினைவுச் சின்னமாக வழங்கப்பட்டதாகும். ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இருந்து பல சுற்றுலாப் பயணிகள் புதிய அரண்மனைக்கு வருகை தருகின்றனர். இந்த அருங்காட்சியகம் அரசப் பொறுப்பிலான இருப்பைக் காட்டும் வகையில் அமைந்துள்ளது.

இங்கு கோலாப்பூரைச் சேர்ந்த சத்ரபதிகளின் உடைமைகள், ஆயுதங்கள், விளையாட்டுப் பொருள்கள், நகைகள், எம்பிராய்டரி மற்றும் வெள்ளியால் ஆன யானையின் சேணம் சாடில்ஸ் போன்ற பல காட்சிப் பொருள்கள் காணப்படுகின்றன. பிரித்தானிய வைஸ்ராய் மற்றும் இந்திய கவர்னர் ஜெனரலின் ஆகியோரின் கடிதங்கள் இங்குள்ளவற்றில் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. ஷாஹாஜி சத்ரபதி அருங்காட்சியகத்தில் அவுரங்கசீப்பின் வாள்களில் ஒன்று காட்சியில் உள்ளது. ஒரு பிரிவில் புலிகள், புலி தலைகள், காட்டு நாய், கரடி, காட்டு எருமை, சிங்கம், காட்டுப்பன்றி, கருப்பு பக், மான் வகைகள் மற்றும் ஒரு இமயமலை கருப்பு கரடி ஆகியவை பதனம் செய்யப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

தர்பார் ஹால்

தொகு

அரண்மனைக்கு நடுவில் தர்பார் ஹால் உள்ளது. அதன் பக்க சுவர்களில் கண்ணாடி அமைப்பில் சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் காட்சிகளை விளக்கும் ஓவியங்கள் உள்ளன. நிரப்பப்பட்ட வளைந்த வளைவுகளைக் காண்பிக்கின்றன; அங்கு வளைந்த நிலையில் அமைந்த தூண்கள் அடைப்புக்குறி போன்ற அமைப்புகளோடு காணப்படுகின்றன. மேலுள்ள பால்கேனி எனப்படுகின்ற முற்றத்தைத் தாங்கும் வகையில் இவ்வமைப்பு உள்ளது. உயர்த்தப்பட்ட நிலையில் அமைந்த சிம்மாசனம் மண்டபத்தின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள புகைப்படங்களில் ஒன்று மகாராஜா ஒருவர் தனது நூறாவது இறந்த புலியுடன் இருப்பதைக் கொண்டுள்ளது. யானை வேட்டையாடல் மற்றும் சிறுத்தைக்குப் பயிற்சி தருவது உள்ளிட்ட தொடர்களும் அங்கு காணப்படுகின்றன.

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு