புதிய சராய்காட் பாலம்

புதிய சராய்காட் பாலம் (New Saraighat Bridge) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு நெடுஞ்சுவர் பாலமாகும். இரண்டாவது சராய்காட் பாலம் என்றும் குறிப்பிடப்படும் புதிய சராய்காட் பாலம் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஒரு நெடுஞ்சுவர் பாலமாகும். இது அசாமின் வடகரையை தென் கரையுடன் இணைக்கிறது.[1] இப்புதிய பாலம் பழைய சராய்காட் பாலத்திற்கு அருகில் பிரம்மபுத்ரா நதியையும், தெற்கில் குவகாத்தியிலுள்ள பாண்டு என்ற பகுதியையும் வடக்கே அமிங்காவோனையும் இணைக்கிறது. பாலத்தின் கட்டுமானம் 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மொத்த நீளம் 1,493.58 மீட்டர் மற்றும் பாலத்தை முடிக்க ரூ .475 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய கட்டிடப் பொறியியல் நிறுவனமான காம்மோன் இந்தியா நிறுவனம் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டது.

புதிய சராய்காட் பாலம்
নতুন শৰাইঘাট দলং
শৰাইঘাটৰ দ্বিতীয় দলং
புதிய சராய்காட் பாலம் (இடது) மற்றும் சராய்காட் (வலது)
போக்குவரத்து இயங்கு ஊர்திகள்
தாண்டுவது பிரம்மபுத்திரா ஆறு
இடம் பாண்டு, குவகாத்தி–அமிங்காவோன், அசாம், இந்தியா
பராமரிப்பு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா)
வடிவமைப்பு நெடுஞ்சுவர் பாலம்
மொத்த நீளம் 1.49 km (0.93 mi)
அகலம் 12.9 m (42 அடி)
கட்டுமானம் தொடங்கிய தேதி 2007
கட்டுமானம் முடிந்த தேதி 2016
திறப்பு நாள் 28 சனவரி 2017

மத்திய இரயில்வே துறை அமைச்சர் ராசன் கோகெயின், வர்த்தகம் மற்றும் கைத்தொழில், போக்குவரத்து மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சந்திர மோகன் படோவாரி, பொதுப்பணித்துறை, மீன்வளம் மற்றும் கலால் துறை அமைச்சர் பரிமல் சுக்லபைத்யா, அமைச்சர் கேசாப் மகந்தா மற்றும் பல அமைச்சர்கள் முன்னிலையில் இம்மூன்று வழிச் சாலை பாலத்தை 2017 ஆம் ஆண்டு சனவரி மாதம் 28 அன்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி திறந்து வைத்தார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Assam: A reason to cheer! After 10 years of waiting, 2nd Saraighat Bridge finally inaugurated". The Northeast Today.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Second Saraighat Bridge over river Brahmaputra to open on January 28". The News Mill. 19 January 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_சராய்காட்_பாலம்&oldid=3065887" இலிருந்து மீள்விக்கப்பட்டது