புதிய மெத்திலீன் நீலம்
புதிய மெத்திலீன் நீலம் ( New methylene blue) என்பது தயசீன் வகை பல்லின வளையக் கரிமச் சேர்மமாகும். நுண்ணுயிர் எதிர்ப்புப் பொருள் ஒரு நிறமிக்கறையாகவும் புதிய மெத்திலீன் நீலம் பயன்படுத்தப்படுகிறது. அசீன் சாயமாக வகைப்படுத்தப்பட்டுள்ள இது குரோமோபோர் என்ற நிறந்தாங்கி நேர்மின் அயனியாகக் கருதப்படுகிறது. எதிர்மின் அயனி என்று எதுவும் தனியாக குறிப்பிடப்படவில்லை [1].
இனங்காட்டிகள் | |
---|---|
6586-05-6 | |
ChemSpider | 16736255 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 73518 |
| |
UNII | 5GCZ112BCN |
பண்புகள் | |
C18H22N3S:SCl ZnCl2 | |
வாய்ப்பாட்டு எடை | 484.22 கி/மோல் |
உருகுநிலை | 239 °C (462 °F; 512 K) |
கொதிநிலை | சிதைவடையும் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பயன்கள்
தொகுகறையாக்கும் முகவராக புதிய மெத்திலீன் நீலம் உடற்செல் நோயியல், நுண்திசு நோயியல் போன்ற துறைகளில் முதிர்ச்சியடையாத இரத்தச் சிவப்பு அணுக்களுக்கு அடையாளமிட பயன்படுத்தப்படுகிறது. முக்கிய மேற்கறையான இது பரவலாகப் புழக்கத்திலிருந்த மெத்திலீன் நீலத்துடன் நெருங்கிய தொடர்புடையதாகும் [2].
முன்பாதுகாப்பு
தொகுபுதிய மெத்திலீன் நீலம் நச்சுத்தன்மை கொண்டது என்பதால் அதை சுவாசிப்பது , தோலில் படுவது முதலானவற்றை தவிர்க்கவேண்டும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Vennerstrom, Jonathan L.; Makler, Michael T.; Angerhofer, Cidy K.; Williams, Jean A. "Antimalarial dyes revisited: xanthenes, azines, oxazines, and thiazine" Antimicrobial Agents and Chemotherapy (1995), 39(12), 2671–7. எஆசு:10.1128/AAC.39.12.2671.
- ↑ "Reticulocyte Count" (PDF). Prentice-Hall.