புதுச்செந்நெறியியம்

புதிய செந்நெறியியம் என்பது, காட்சிக் கலைகள், இலக்கியம், நாடகம், இசை, கட்டிடக்கலை போன்றவை சார்ந்தனவும், பண்டைக் கிரேக்கம், பண்டைய உரோம் ஆகியவற்றின் கலை பண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டனவுமான இயக்கங்களைக் குறிக்கும். முக்கியமான புதுச் செந்நெறியிய இயக்கம் 18 ஆம் நூற்றாண்டின் அறிவெளிக் காலத்துடன் பொருந்தியிருந்ததுடன் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதிவரை தொடர்ந்து இருந்தது. இது அக்காலத்தில் எழுச்சிபெற்ற புனைவியத்துடன் போட்டியிட்டது. கட்டிடக்கலையில் இந்த இயக்கத்தின் தாக்கம் 19, 20 ஆம் நூற்றாண்டுகளிலும் 21 ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்து இருப்பதைக் காணலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுச்செந்நெறியியம்&oldid=3167752" இலிருந்து மீள்விக்கப்பட்டது