புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ்

புதுச்சேரி அரசியல் கட்சி

புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ் (Puducherry Munnetra Congress, முன்னர் பாண்டிச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ், என அறியப்பட்டது) என்பது இந்திய ஒன்றியப் பகுதியான, புதுச்சேரியில் செயல்படும் ஒரு அரசியல் கட்சியாகும். இது புதுச்சேரி அரசியல்வாதியான பி. கண்ணனால் 11 மே 2005 அன்று உருவாக்கப்பட்டது. இதன் சின்னம் மணி ஆகும்.[1]

புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ்
தலைவர்பி. கண்ணன்
நிறுவனர்பி. கண்ணன்
தொடக்கம்11 மே 2005
கலைப்பு2009
இணைந்தவைஇந்திய தேசிய காங்கிரசு
முன்னர்புதுச்சேரி மக்கள் காங்கிரசு
பின்னர்மக்கள் முன்னேற்றக் கழகம்
கூட்டணிஅதிமுக கூட்டணி+ (2006)
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
()
0 / 33
தேர்தல் சின்னம்
மணி
இந்தியா அரசியல்

இக்கட்சி 2006 தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்து புதுச்சேரி சட்டப் பேரவையில் 3 இடங்களை வெற்றி கொண்டது.

2009 பொதுத் தேர்தலில் இக்கட்சி இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது.[2] 2019, செப்டம்பர், 25 அன்று, பி. கண்ணன் மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் (எம்எம்சி) என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். பின்னர் 2021 இல் பாஜகவில் சேர்ந்தார். 2023 இல் பாஜகவிலிருந்து விலகினார். பின்னர் நிமோனியா நோயினால் இறந்தார்.

மேற்கோள்கள்

தொகு