புதுவை 3 (நெல்)
பி ஒய்- 3 (PY 3) (வேளாண் வழக்கு பாரதிதாசன் (Bharathidasan) எனப்படும் இந்த நெல் வகை, ஐ ஆர் 3403 - 267/ பி டி பி 33 / ஐ ஆர் 36 (IR 3403-267/ PTB 33/IR 36) என மூன்று நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட புதுச்சேரி நெல் வகையாகும்.[2]
புதுவை - 3 PY 3 |
---|
வேளாண் பெயர் |
பாரதிதாசன் |
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
ஐஆர் 3403 - 267 X பிடிபி 33 X ஐஆர் 36 |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
110 - 115 நாட்கள் |
மகசூல் |
5500 கிலோ எக்டேர் |
வெளியீடு |
1984 |
வெளியீட்டு நிறுவனம் |
புதுவை வேளாண் அறிவியல் நிலையம் |
மாநிலம் |
புதுச்சேரி |
நாடு |
இந்தியா[1] |
வெளியீடு
தொகுஇந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியின் வேளாண் அறிவியல் நிலையம், 1984 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[3]
காலம்
தொகுகுறுகியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 110 - 115 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது. இதுபோன்ற குறுகியகால நெற்பயிர்கள், சொர்ணவாரி பட்டத்திற்கு (பருவத்திற்கு) ஏற்றதாக கூறப்படுகிறது.[1][4]
சாகுபடி
தொகுபாசன வசதியுள்ள பகுதிகளில் நன்கு வளரக்கூடிய இந்த நெல் வகை, இந்திய ஒன்றியப் பகுதியான புதுச்சேரி, மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]
- இந்த நெல் இரகம், ஒரு எக்டேருக்கு 5500 கிலோவரை (5,5 t/ha) மகசூல் தரக்கூடியது.[1]
- குலைநோயை (BPH Resistant) எதிர்த்து வளரக்கூடிய தன்மை வாய்ந்ததாக கூறப்படுகிறது .[1]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "P.K. Krishi Vigyan Kendra Puducherry - Varieties developed and released:" (PDF). www.icar-iirr.org (ஆங்கிலம்). 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-07-05.
- ↑ 2.0 2.1 "PY 3". www.rkmp.co.in (ஆங்கிலம்). 2011. Archived from the original on 2018-06-30. பார்க்கப்பட்ட நாள் 2018-07-04.
- ↑ "Some of the achievements by the Kendra since its inception are -". agri.puducherry.gov.in (ஆங்கிலம்). 2018. Archived from the original on 2018-06-28. பார்க்கப்பட்ட நாள் 2018-07-05.
- ↑ "Variety PY3". btistnau.in (ஆங்கிலம்). 2018. Archived from the original on 2020-08-08. பார்க்கப்பட்ட நாள் 2018-07-05.