புதையல்
புதையல் ( buried treasure) என்பது கடற்கொள்ளையர்கள் மற்றும் சட்டவிரோதச் செயல்களைச் செய்யும் மக்களின் நம்பிக்கையின் ஒரு முக்கிய அம்சமாகும். பிரபலமான கருத்தாக்கத்தின் படி, அரசர்கள், செல்வந்தர்கள், கொள்ளையர்கள் போன்றோர் யாருக்கும் தெரியாத தொலைதூர இடத்தில் தங்கள் விலை மதிப்புமிக்க செல்வத்தை புதைத்து வைப்பார்கள். பின்னர் அவர்கள் மீண்டும் அதை எடுப்பதற்காக, பெரும்பாலும் புதையல் வரைபடங்களைப் பயன்படுத்துவர்.
கடற்கொள்ளையர் புதையல்கள்
தொகுஉண்மையில், பொக்கிஷங்களை கடற்கொள்ளையர்கள் புதைத்து வைப்பது என்பது மிக அரிதான செயலாகும்: இவ்வாறு பொக்கிசங்களைப் புதையலாக புதைத்துவைத்திருந்த ஒரே கடற்கொள்ளையன் பைரேட் வில்லியம் கிட் ஆவார்.[1]
இந்தியாவில் புதையல்
தொகுஇந்தியாவில் குறிப்பிட்ட சில கோட்டைகள், கோயில்கள் போன்ற இடங்களில் புதையல்களை மன்னர்கள் புதைத்து வைத்திருப்பதாக நம்புபவர்கள் உள்ளனர். அவர்கள் பாழடைந்த அளரவமற்ற கோயில் போன்ற இடங்களில் புதையலுக்காக இரவு நேரங்களில் ஆழமான குழிகளை நோன்டி புதையலைத் தேடுவது அவ்வப்போது நடக்கிறது. சிலர் புதையலை பூதம் காப்பதாகவும்,[2] அதை எடுக்க பூசைகள் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு பூசைகள் செய்து பலியிடுதல் போன்றவற்றையும் செய்கின்றனர்.
இந்திய புதையல் சட்டத்தின்படி மதிப்புடைய எந்தவொரு பொருளும் பூமிக்குள் புதைந்திருந்து அது கண்டுபிடிக்கப்பட்டால் அது “புதையல்” எனப்படும். இச்சட்டத்தின் பிரிவு 4ன் படி ரூ.10/-க்கு மேற்பட்ட மதிப்புடைய எந்தவொரு புதை பொருளும் கண்டறிப்பட்டால், அதைக் கண்டுபிடித்தவர் இது குறித்து முதலில் வட்டாட்சியர் அல்லது கிராம நிர்வாக அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்.[3] [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Cordingly, David (1995). Under the Black Flag: The Romance and Reality of Life Among the Pirates. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-679-42560-8.
- ↑ "புதையலை காவல் காக்கும் 7 பூதம்". கட்டுரை. தமிழ் முரசு. பார்க்கப்பட்ட நாள் 19 அக்டோபர் 2018.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "பழம்பொருள் புதையல் கிடைத்தால் என்ன செய்வது?". கட்டுரை. இந்து தமிழ். 18 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 19 அக்டோபர் 2018.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "புதையல், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்". Archived from the original on 2019-10-28. பார்க்கப்பட்ட நாள் 2019-11-02.