புத்தகத் திருவிழா (தமிழ்நாடு)
புத்தகத் திருவிழா அல்லது புத்தக் கண்காட்சி, என்பது பொது மக்களிடையே புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் அதிகரிக்கவும், புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் அமைப்பான தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்,[1] தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ஆண்டு தோறும் நூற்றுக்கும் அதிகமான அரங்குகள் கொண்ட புத்தகத் திருவிழா கண்காட்சி பத்து நாட்கள் நடத்துகிறது. புத்தகத் திருவிழாவில் விற்பனை செய்யப்படும் நூல்களுக்கு விற்பனை விலையில் குறைந்த பட்சம் பத்து விழுக்காடு தள்ளுபடி வழங்குகிறது.
கருத்தரங்கம்
தொகுஇக்கண்காட்சியில் மாலை 5. 30 மணி முதல் சிறப்பு எழுத்தாளர்கள் பங்கேற்கும் சொற்பொழிவுகள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் இலக்கிய நிகழ்ச்சிகள், விசாரணை அரங்கம், சுழலும் சொல்லரங்கம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் போன்றவையும் இடம் பெறுகின்றன. [2][3]
வரலாறு
தொகு1977இல் சென்னை மதரசா-இ-ஆசாம் பள்ளியில் முதல் நான்கு புத்தகக் காட்சிகள் நடத்தப்பட்ட பிறகு, 1981-ஆம் ஆண்டு இராயப்பேட்டை, சென்னை - இல் இருந்த ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடத்தப்பட்டது. சென்னை புத்தகக் காட்சியின் பெருவெற்றியின் காரணத்தினால், உதகமண்டலம், பாண்டிச்சேரி, மதுரை, திருப்பூர், நெய்வேலி, நாகர்கோயில், காரைக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களிலும் "தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தால்" புத்தகக் காட்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.