புத்ததேப் போசு
புத்ததேவா போஸ் (Buddhadeva Bose) புத்ததேப் போசு என்றும் அழைக்கப்படும் (பிறப்பு: 1908 - இறப்பு: 1974) [2] இவர் ஓர் 20 ஆம் நூற்றாண்டின் வங்காள மொழி எழுத்தாளராவார். கவிஞர் என்று அடிக்கடி குறிப்பிடப்படும் இவர், கவிதைகளைத் தவிர புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள் மற்றும் கட்டுரைகளை எழுதிய பல்துறை எழுத்தாளராவார். இவர் தனது காலத்தின் செல்வாக்கு மிக்க விமர்சகராகவும் மற்றும் ஆசிரியராகவும் இருந்தார். வங்காளக் கவிதைகளில் நவீனத்துவத்தை அறிமுகப்படுத்திய ஐந்து கவிஞர்களில் ஒருவராக இவர் அங்கீகரிக்கப்படுகிறார். இரவீந்திரநாத் தாகூருக்கு பிறகு, வங்காள இலக்கியத்தில் இன்னும் பல்துறை திறமையானவர்கள் உருவாகவில்லை என்றும் கூறப்படுகிறது. [3]
புத்ததேப் போசு | |
---|---|
2008 ஆம் ஆண்டு இந்தியாவின் அஞ்சல் முத்திரையில் போசு | |
பிறப்பு | 1908 கொமில்லா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்போது வங்காளதேசம்) |
இறப்பு | 1974 கொல்கத்தா, இந்தியா |
தொழில் | எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர், கட்டுரையாளர். [1] |
தேசியம் | இந்தியன் |
துணைவர் | பிரதிபா போசு |
பிள்ளைகள் |
|
சுயசரிதை
தொகுபுத்ததேவா போஸ் 1908 நவம்பர் 30 அன்று பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தின் கொமிலா மாவட்டத்தில் (தற்போது வங்காள தேசம்) பிறந்தார். இவரது மூதாதையர் வீடு பிக்ராம்பூர் பிராந்தியத்தில் உள்ள மல்கானகர் கிராமத்தில் இருந்தது. இவரது தந்தையின் பெயர் பூதேப் சந்திரபோசு மற்றும் தாயின் பெயர் பினாய் குமாரி என்பதாகும். இவர் பிறந்த சில மணிநேரங்களிலேயே இவரது தாயார் இறந்துவிட்டார். இவரது தந்தை சில ஆண்டுகளுக்குப் பிறகு மறுமணம் செய்து கொண்டார். புத்ததேவாவை அவரது தாய்வழி தாத்தா மற்றும் பாட்டியான சிந்தாகரன் சின்கா மற்றும் சுவர்ணலதா சின்கா ஆகியோர் வளர்த்து வளர்த்தனர். கோமிலா மற்றும் நவகாளி ஆகிய இடங்களில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை படித்தார். பின்னர் டாக்காவில் உள்ள டாக்கா கல்லூரிப் பள்ளியில் பயின்றார். 1925 இல் மெட்ரிகுலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இடைநிலை தேர்வில் இரண்டாம் இடத்தைப் பெற்றார். இவரது ஆரம்பகால வாழ்க்கை டாக்காவுடன் தொடர்புடையது. அங்கு இவர் 47 புராண பல்தானில் ஒரு எளிய வீட்டில் வசித்து வந்தார்.
இலக்கிய வாழ்க்கை
தொகுதாகூருக்கு பிறகு இலக்கிய ஆளுமை என்று வங்காள இலக்கிய வட்டாரங்களில் தோன்றவில்லை என்றாலும், புத்ததேவா போசு ராத் பரே ப்ரிஷ்டி என்ற தடை செய்யப்பட்ட புதினத்தால் பெரும் புகழ் பெற்றார். இது ஒரு முக்கோணக் காதலைச் சித்தரித்தது, இது மனித உறவுகளில் பாலினத்தை ஒரு முக்கிய பங்கை வெளிப்படையாக அனுமதித்தது. இறுதியில், உயர்நீதிமன்றம் இந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து அப்புதினத்தை விடுவித்தது. ராத் பரே ப்ரிஷ்டி கிளின்டன் பி. சீலி என்பவரால் "ரெயின் த்ரோ தி நைட் என்ற தலைப்பில் மொழி மாற்றம் செய்யப்பட்டது [4] [5] .
அங்கீகாரம்
தொகுகீழே குறிப்பிடப்பட்ட முறையான அங்கீகாரம் தவிர, பிபி 20 ஆம் நூற்றாண்டின் வங்காளா இலக்கியத்தின் மிக முக்கியமான இலக்கிய ஆளுமைகளில் ஒன்றாக இருந்தார். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வங்காள நவீனத்துவத்தை உருவாக்க வந்த கவிஞர்களின் தொகுப்பில் புத்ததேப் மைய நபராக ஆனார். [6]
புத்ததேவா போசு தனது வசன நாடகமான தபஸ்வி-ஓ-தரங்கினிக்காக 1967 ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார். 1974 இல் ஸ்வகடோ பிடே (கவிதை) படத்திற்காக ரவீந்திர புரஸ்காரைப் பெற்றார். மேலும் 1970 இல் பத்ம பூசண் வழங்கி கௌரவிக்கப்பட்டார். [7]
குறிப்புகள்
தொகு- ↑ Sisir Kumar Das (1991). A History of Indian Literature: 1800–1910, Western impact : Indian response. Sahitya Akademi. pp. 751–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7201-006-5.
- ↑ Vasudha Dalmia; Rashmi Sadana (5 April 2012). The Cambridge Companion to Modern Indian Culture. Cambridge University Press. pp. 118–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-51625-9. பார்க்கப்பட்ட நாள் 8 January 2013.
- ↑ Ashoke Mitra (1977) Calcutta Diary. India.
- ↑ "Clinton B. Seely Vita" (PDF). Archived from the original (PDF) on 28 July 2007. பார்க்கப்பட்ட நாள் 10 February 2008.
- ↑ Rain through the Night, New Delhi: Hind Pocket Books, 1973.
- ↑ Buddhadeva Bose – another subcontinent forums. Anothersubcontinent.com (4 December 2007). Retrieved on 2018-11-12.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
மேலும் படிக்க
தொகு- The Ditiyo Chinta, Buddhadeva Bose birth centenary issue, Ed. Iffat Ara, February 2008, Mymensingh, Bangladesh.