புத்தமத கண்டன நூல்
புத்த மதக் கருத்துகளைக் கண்டித்து மாறுபட்ட விளக்கங்களைத் தரும் நூல்களை மு. அருணாசலம் புத்தமத
புத்த மதக் கருத்துகளைக் கண்டித்து மாறுபட்ட விளக்கங்களைத் தரும் நூல்களை மு. அருணாசலம் புத்தமத கண்டன நூல் என்னும் தலைப்பின் கீழ் விளக்குகிறார். [1] நீலகேசி உரை, குண்டலகேசி உரை என்னும் இரண்டு உரை நூல்களும் புத்த சமயக் கருத்துக்களை மறுப்பதற்கு என்றே எழுதப்பட்டவை.
நீலகேசி உரையில் புத்த சமயக் கருத்துக்களைக் கண்டிக்கும் வெண்பாக்கள் 19 உள்ளன.
1
- விதியால வருவது அல்லால் மேதக்கோர் தங்கள்
- மதியினால் வாழ்வது ஒன்று உண்டோ - பதிதொறும்
- சங்கரனும் ஐயம் மேற்கொண்டு உண்டான் தடம் கடல் சூழ்
- மங்கையுடன் காடு உறைந்தான் மால்.
2
- தனக்கும் பிறர்க்கும் பயனின்றிப் புத்தன்
- எனைத்துத் துயரும் உழத்தல் - கணப் பிணியின்
- நீங்கித் தன் கூத்தி குலத்தான் என ஆதல்
- தூங்கத் தலை அரிந்து அற்று.
அடிக்குறிப்பு
தொகு- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 308.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டவை