புத்தளம் பெரிய பள்ளி
புத்தளம் பெரிய பள்ளி (மொஹிடீன் ஜும்மா மஸ்ஜித்) என்ற அழைக்கபடும் பள்ளிவாசல் புத்தளதில் அமைந்துள்ள மிகப்பெரிய பள்ளியாகும். பல நூற்றாண்டு வரலாற்றை கொண்ட இப்பள்ளிவாசல் 1938 செப்டெம்பர் 21ம் திகதி புணர்நிர்மானிக்கபட்டது(தற்போதைய தோற்றம்).
புத்தளம் பெரிய பள்ளி | |
---|---|
புத்தளம் நகர கடைத்தெருவிலிருந்து. | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | புத்தளம், இலங்கை |
புவியியல் ஆள்கூறுகள் | 8°01′54″N 79°49′36″E / 8.03167°N 79.82667°E |
சமயம் | இஸ்லாம் |
ஆட்சிப்பகுதி | புத்தளம் |
மாவட்டம் | புத்தளம் |
நிலை | பள்ளிவாசல் |
வரலாறு
தொகு1400களில் மீரா உம்மா எனும் தனவந்தரால் நிலம் நன்கொடையாக வழங்கபட்டு இந்த இடத்தில் ஜும்மா பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டுள்ளது. பின் 1937 புதிய பள்ளிவாசல் கட்டுவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு 1938.09.21 நிறைவுபெற்றது.[1]
1700 களில் கண்டி மன்னன் புத்தளம் பெரிய பள்ளிக்கு விஜயம் செய்துள்ளார். இந்நிகழ்வில் அவர் பல பரிசு பொருட்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அவை இன்னும் இங்கு பொது மக்கள் பாவனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
1976 சிங்கள முஸ்லிம் கலவரத்தின் போது இப்பள்ளியில் தஞ்சம் புகுந்த பொதுமக்கள் மீது பொலிசார் தாக்குதல் நடத்தினர். இதன் போது 7 பேர் பள்ளியினுள்ளே மரணித்தார்கள்.[2]
உசாத்துணைகள்
தொகு- ↑ http://puttalamonline.com/2018-08-28/puttalam-regional-news/134303/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-08-29. பார்க்கப்பட்ட நாள் 2018-08-29.