புனிதர்கள் பள்ளத்தாக்கு

புனிதர்கள் பள்ளத்தாக்கு (The Valley of Saints) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்திலுள்ள அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள குல்தாபாத்து நகரத்தில் அமைந்துள்ளது. இசுலாத்தின் இறைநிலை என அறியப்படும் சூபித்துவத்தை பின்பற்றும் இறையியலாளர்கள் 14 ஆம் நூற்றாண்டில் குல்தாபாத்து நகரத்தை தேர்ந்தெடுத்து வசித்ததாகக் கூறப்படுகிறது. முண்டாயிப் அல்-தின் தர்காவும், முகலாய பேரரசின் கடைசி பெரிய மன்னரான ஔரங்கசீப்பின் கல்லறையும் இங்கு அமைந்துள்ளன. சர் சாரி சர் பக்சு என்ற மற்றொரு பெயரால் அறியப்படும் முண்டாயிப் அல்-தின் தில்லியைச் சேர்ந்த இவருடைய ஆசிரியர் நிசாமுதின் ஆலியா அழைத்த காரணத்தால் இப்பகுதிக்கு 14 ஆம் நூற்றாண்டில் குடிபெயர்ந்துள்ளார். [1]

மேற்கோள்கள் தொகு