புனித எலன்சு மலை
புனித எலன்சு மலை அல்லது சென் ஹெலன்ஸ் மலை (Mount St. Helens) என்பது ஐக்கிய அமெரிக்காவில் வாஷிங்டனில் அமைந்துள்ள ஒரு தீவிர எரிமலையாகும். இது சியாட்டில் நகரில் இருந்து 96 மைல்கள் (154 கிமீ) தெற்கேயும், போர்ட்லாந்தில் இருந்து 53 மைல்கள் (85 கிமீ) வடகிழக்கேயும் அமைந்துள்ளது.
புனித எலன்சு மலை | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 2,549 m (8,363 அடி) |
சென் ஹெலன்ஸ் மலை மே 18, 1980 இல் வெடித்த நிகழ்வு[1] அமெரிக்காவின் வரலாற்றில் மிகவும் அழிவை ஏற்படுத்திய ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது. மொத்தம் 57 பேர் கொல்லப்பட்டனர்; 250 வீடுகள், 47 பாலங்கள், 15 மைல் (24 கிமீ) தூர தொடருந்து வழிகள், 185 மைல் (300 கிமீ) தூர நெடுஞ்சாலைகள் சேதமடைந்தன[2].
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mount St. Helens National Volcanic Monument". USDA Forest Service. (26 நவம்பர் 2006 இல் அணுகப்பட்டது)
- ↑ "May 18, 1980 Eruption of Mount St. Helens". USDA Forest Service. பார்க்கப்பட்ட நாள் 2007-08-11.
வெளி இணைப்புகள்
தொகு- சென். ஹெலன்ஸ் மலை பரணிடப்பட்டது 2013-05-03 at Archive.today