புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு

செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி (St. Joseph's Higher Secondary School, Chengalpattu) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் செங்கல்பட்டு நகரத்தில் அமைந்துள்ளது.[1] [2]

செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி
St. Joseph's Higher Secondary School, Chengalpattu
பள்ளி வளாகம் (முன்புறம்)
அமைவிடம்
செங்கல்பட்டு, தமிழ்நாடு
இந்தியா
தகவல்
வகைபொதுப்பள்ளி
குறிக்கோள்கடவுள் எங்கள் நம்பிக்கை
தொடக்கம்1966
அதிபர்இசுட்டானிசுலசு
மாணவர்கள்2862 (தோராயம்)
வளாகம்நகரம்
இணையம்

1966 ஆம் ஆண்டு புனித கேப்ரியல் மாண்ட்ஃபோர்டு சகோதரர்களால் செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது. "கடவுள் எங்கள் நம்பிக்கை" என்ற பொன்மொழியைக் கொண்டு இயங்குகிறது. திருச்சியின் புனித கேப்ரியல் மாண்ட்ஃபோர்டு சகோதரர்கள் மாகாணத்தின் கீழ் ஒரு நிறுவனமாக இப்பள்ளி செயல்படுகிறது.[3]

வரலாறு தொகு

1800 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், உள்ளூர்வாசிகளின் குழுவொன்று உள்ளூர் உயர்நிலைப் பள்ளியாக இப்பள்ளியைத் தொடங்கியது. 1931 ஆம் ஆண்டு இப்பள்ளி புனித சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது. கத்தோலிக்க பிதாக்களால் பள்ளியின் நிர்வாகம் 1966 வரை தொடர்ந்தது. மேத்யூ வடசேரி கடைசியாக தலைமை ஆசிரியராக இருந்தார். 1966 ஆம் ஆண்டில் பள்ளி புனித கேப்ரியல் மாண்ட்ஃபோர்டு சகோதரர்களால் கைப்பற்றப்பட்டது.

பாடத்திட்ட இணை செயல்பாடுகள் தொகு

  • உடற்கல்வி
  • விளையாட்டு
  • எழுத்தறிவு மற்றும் விவாத சங்கம்
  • சாரணர் இயக்கம்
  • சமூக சேவை
  • கல்வி சுற்றுலா
  • கணிதக் கழகம்
  • தடகள மன்றம்
  • தேசிய மாணவர் படை
  • நுண்கலை சங்கம்
  • கால்பந்து
  • கைப்பந்து
  • கூடைப்பந்து

மேற்கோள்கள் தொகு

புற இணைப்பு தொகு