புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரி

புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரி அல்லது சென்னைக் கல்விச் சங்கம் (The College of Fort St. George) என்பது கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக் காலத்தில், சென்னை மாகாணத்தின் தலைநகரான சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் செயற்பட்டுவந்த ஒரு கல்லூரியாகும். இக்கல்லூரி சென்னை ஆட்சியரான எல்லீசனால் 1812 இல் துவக்கப்பட்டது.[1]

வரலாறு தொகு

இக்கல்லூரியானது இந்தியாவில் அரசு பணிகளில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டு, இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களுக்கு தென்னிந்திய மொழிகளைக் கற்றுத் தருவதற்காக 1812 இல் துவக்கப்பட்டது. அப்போதிருந்து 1854வரை செயல்பட்ட இக்கல்லூரி பின் மூடப்பட்டது. இக்கல்லூரியைத் துவக்கிய எல்லீசன் 1812இல் இருந்து கல்லூரியின் மேற்பார்வைக் குழுவின் தலைவராக அவர் 1819இல் இறக்கும்வரை இருந்தார்.

இக்கல்லூரியானது ஆசிரியவியல் குறித்த நூல்களையும், கல்வி நூல்களையும் வெளியிடும் ஒரு அச்சகத்தையும் கொண்டிருந்த‍து. இக்கல்லூரியில் அக்காலத்திய முன்னணி அறிஞர்கள் தமிழ், தெலுக்கு, சமசுகிருத துறைத் தலைவர்களாக இருந்தனர். கல்லூரியானது தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளின் செவ்விலக்கிய மூலப்பிரதிகளைச் சேகரித்து வைத்த‍து. அக்காலத்திய முன்னணி அறிஞர்கள் இந்த மூலப் பிரதிகளில் உள்ள சில முதன்மையான நூல்களை கல்லூரியிலும், வெளியிலும் முதன்முறையாக அச்சுக்குக் கொண்டுவந்தனர்.[2]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "College of Fort St George". OVERVIEW. oxfordreference.com. பார்க்கப்பட்ட நாள் 18 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. சென்னைக் கல்விச்சங்கம் வெளியீடுகள் (2009). புதிய புத்தகம் பேசுது சிறப்பு மலர், தமிழ்ப் புத்தக உலகம், 1800 - 2009. சென்னை: பாரதி புத்தகாலயம். பக். 133 -138.