புனித மரியன்னை மேனிலைப் பள்ளி, திண்டுக்கல்

புனித மரியன்னை மேனிலைப் பள்ளி (St. Mary's Higher Secondary School) திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் மாநகராட்சி அலுவலகம் அருகில் அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றான இப்பள்ளி ஏழைகளுக்கு கல்வி வழங்கும் பொருட்டு கத்தோலிக்க ஆலயத்தின் ஆணைப்படி இயேசு சபை சங்கத்தால் 1850 இல் நிறுவப்பட்டது.

புனித மரியன்னை மேனிலைப் பள்ளி
அமைவிடம்
திண்டுக்கல், தமிழ் நாடு
தகவல்
தொடக்கம்1850
பள்ளி மாவட்டம்திண்டுக்கல்
கல்வி ஆணையம்முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்
தரங்கள்ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை
கல்வி முறைதமிழ்நாடு மாநிலப் பள்ளிக் கல்வித் திட்டம்
புனித மரியன்னை மேனிலைப் பள்ளி

இக்னேசியசு லயோலாதொகு

 
இக்னேசியசு லயோலா, c. 1620–22

இக்னேசியசு லயோலா( 1491- ஜூலை 31,1556 ) ஸ்பெயின் நாட்டில் பாசுக்கு உயர்குடியிலிருந்து வந்தவர். இவர் இயேசு சபை சங்கத்தை நிறுவினார்.[1] மறுமலர்ச்சிக் காலத்தில் கிரேக்க- இக்னேசியசு மத தலைவராக உருவானார். இவர் கத்தோலிக்க திருச்சபை அதிகாரம் மற்றும் தலைமைக்கு கீழ்ப்படிந்தார். [2]

கல்வி நிறுவனம்தொகு

1524 மற்றும் 1537 ஆம் ஆண்டிற்கு இடையில், இக்னேசியசு ஸ்பெயின் மற்றும் பாரிசில் இறையியல் மற்றும் லத்தீன் படித்தார். 1540ல் திருத்தந்தை மூன்றாம் பவுல் (ஆட்சிக் காலம் 1534-1549) இக்னேசியசுக்கு கத்தோலிக்க திருச்சபையில் சீர்திருத்தம் கொணரவும் (Counter-Reformation) அதைக் காலத்தின் தேவைகளுக்கேற்ப புதுப்பிக்கவும் அங்கீகாரம் அளித்தார். அதன்படி இயேசு சபையால் புனித மரியன்னை மேனிலைப் பள்ளி திண்டுக்கல்லில் 1850 இல் நிறுவப்பட்டது. பள்ளி சூழல் பசுமையான விசாலமான மைதானம் மற்றும் பல விளையாட்டு துறைகள் கொண்டது.இப்பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்குகின்றனர்.[3]

திண்டுக்கல் ஐ. லியோனிதொகு

நகைச்சுவை பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ. லியோனி புனித மரியன்னை மேனிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்தார்.

மேற்கோள்கள்தொகு