புனே பழங்குடியினர் அருங்காட்சியகம்
புனே பழங்குடியினர் அருங்காட்சியகம் (Pune Tribal Museum) இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் புனே நகரில் அமைந்துள்ளது. புனேவில் உள்ள பழங்குடி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விரிவாக்கமாக 1962 ஆம் ஆண்டு அருங்காட்சியகம் நிறுவப்பட்டது,[1] 1965 ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கி மகாராட்டிர பழங்குடியினரின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தி வருகிறது. பழங்குடியினரின் கலை மற்றும் கவித்துவ அம்சங்களைப் பாதுகாக்க உறுதிபூண்ட ஓர் இடமாக செயல்படுகிறது.[1] அருங்காட்சியகத்தின் நிர்வாகம் தற்போது புனேவில் உள்ள பழங்குடி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உள்ளது.[2]
நிறுவப்பட்டது | 1962 |
---|---|
அமைவிடம் | புனே, மகாராட்டிரம் |
வகை | பழங்குடியினர் அருங்காட்சியகம் |
கண்காட்சிகள்
தொகுமகாராட்டிராவின் உள்ள 47 பழங்குடியினருடன் தொடர்புடைய இசைக்கருவிகள், நகைகள், கருவிகள், கைவினைப்பொருட்கள், ஆடைகள், சிலைகள், வீட்டுப் பொருட்கள், புகைப்படங்கள், ஆயுதங்கள், கருவிகள், போர் ஓவியங்கள், மூங்கில் வேலைகள், முகமூடிகள், உடைகள், பாத்திரங்கள் உள்ளிட்ட கலைப்பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[2]
விரிவாக்க திட்டங்கள்
தொகுபுனே விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள், அதே விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புனேவின் காட்சி மையமான பழங்குடியினர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உள்ள இந்த அருங்காட்சியகத்தை மெய்நிகர் சுற்றிப் பார்க்க உதவும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Neela Karnik (2007) Museumising the tribal: Why tribe‐things make me cry, South Asia: Journal of South Asian Studies, 21:1, 275-288, DOI: 10.1080/00856409808723337
- ↑ 2.0 2.1 HT, Correspondent (2017-06-29). "Visit this Pune museum where Maharashtra's tribal heart still beats". Hindustan Times, India. பார்க்கப்பட்ட நாள் 2018-04-24.
- ↑ Sengupta, Joy (2018-01-17). "Flyers can go on virtual tours of tribal museum at Pune airport". Times of India, India. பார்க்கப்பட்ட நாள் 2018-04-24.